அரசியல்வாதிகளுக்கு அடிபணியாதீர்; அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
அரசியல்வாதிகளுக்கு அடிபணியாதீர்: ராஜ்நாத்சிங்

புதுடில்லி: ''அரசியல் எஜமானர்கள் தவறான உத்தரவு பிறப்பித்தால், அதற்கு அடிபணியாமல், தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும்,'' என, அரசு அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


பாராட்டு:


தலைநகர் டில்லியில், குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, அரசு அதிகாரிகள் பங்கேற்ற விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில், அரசு அதிகாரிகளின் பணி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக அதிகாரிகளை பாராட்டுகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, பாரபட்சமின்றி செயல்படவேண்டும்; இதை, எப்போதும் ஞாபகத்தில்வைத்துக் கொள்ளவேண்டும்.


பாதிப்பு ஏற்படும்:


சரியான, தைரியமான முடிவை, எந்தவித தயக்கமும் இன்றி, அதிகாரிகள் எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அதிகாரிகளின் முடிவு எடுக்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டு விடும்.உங்கள் அரசியல் எஜமானர்கள், உங்களுக்கு தவறாக உத்தரவு பிறப்பித்தால், அதை ஏற்க வேண்டாம்; விதிமுறைகளின்படிதான் செயல்படுவேன் என கூறுங்கள். தவறான உத்தரவின்படி, எந்த கோப்பிலும் கையெழுத்திட வேண்டாம்.


அடியணியாதீர்கள்:


அரசியல் எஜமானர்களின் தவறான உத்தரவுக்கு ஆமாம் சாமி போட்டு, அடிபணியாமல் துணிச்சலாக செயல்படுங்கள்.முடிவு எடுப்பதில் தயக்கம் ஏற்பட்டால், சீனியர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கலாம். நம் நாட்டின் ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு, நிர்வாக முறை முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201714:36:40 IST Report Abuse
Sundar They are beyond redemption since they are habituated for personnel gain whenever change of administration. Only solution is implement 'Emergency Rule'as effectively done by Indira Ghandhi in the past for two years.
Rate this:
Share this comment
Cancel
Kalyani S - Ranipet,இந்தியா
21-ஏப்-201713:23:35 IST Report Abuse
Kalyani S அதிகாரிகளே இவரும் ஒரு அரசியல் வாதிதான் எனவே இவர் சொல்வதற்கு "அடிபணியாமல், தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும்,''
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
21-ஏப்-201713:17:18 IST Report Abuse
rajarajan யோக்கியனைப்போல் நடிக்காதீங்க பாஸ். ஆர் கே நகரில் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தவர்களில் விஜயபாஸ்கரை மட்டும் வளைத்த உங்களுடைய வருமானவரி அதிகாரிகள் மற்ற 11 அமைச்சர்களை விட்டது ஏன்? எந்த எலும்புத்துண்டுக்காக அவர்கள் ஒருவரை மட்டும் வளைத்தார்கள். ராம் மோகன் ராவை பிடித்த போது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான டாக்குமெண்டுகள் கிடைத்தன அவருடைய மகனுக்கு துபாயில் காம்பிளக்ஸ் உள்ளது என்றெல்லாம் புருடா விட்டீர்களா அல்லது உண்மையை கூறினீர்களா. அதற்கு பிறகு என்ன செய்தீர்கள். சேகர் ரெட்டியை உள்ளே தள்ளினீர்கள் அவருக்கு உடந்தையாக இருந்த ஓ பி எஸ் ஐ என்ன செய்தீர்கள். சோறுபோடும் விவசாயிகள் செத்தா பரவாயில்லை ஆனா மாடுகளை யாரும் கொன்றுவிடாமல் பாதுகாக்கும் உங்க வேலையை மட்டும் தெளிவா பாருங்க பாஸு, போங்க
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-ஏப்-201712:53:00 IST Report Abuse
JeevaKiran அதற்கு முதல் படி போலீசார்தான். எவனாவது ஒரு குற்றவாளியை கஷ்டப்பட்டு போலீசார் பிடித்துக்கொண்டு வந்தால், பின்னாலேயே ஒரு அரசியல் அல்லக்கை வந்து, அல்லது போன் மூலம் இது நம்மாள்தான் விட்டுவிடு என்பான். பின் போலீசார் பேச்சு மூச்சு இல்லாமல் அந்த குற்றவாளியை விட்டு விடுவார்கள். பிறகு நாடு எப்படி உருப்படும். போலீசார் பிடிக்கும் குற்றவாளிக்கு எவனாவது வக்காலத்து வாங்கினால் அவனையும் பிடித்து உள்ளே போடுங்கள். பிறகு பாருங்கள் நாட்டில் குற்றங்கள் எப்படி குறைகிறதென்று.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-ஏப்-201712:51:26 IST Report Abuse
JeevaKiran நல்ல தொடக்கம். போலீசாருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் எந்த ஒரு அரசியல் வியாதிகளுக்கும் (அவன் MLA, MP, மந்திரியாகவே இருந்தாலும்) போலீசார் அடிபணியக்கூடாது. பிறகு பாருங்கள் குற்றங்கள் எப்படி தானாகவே குறைகிறது என்று.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201712:43:44 IST Report Abuse
Pasupathi Subbian தமிழகத்தை பொறுத்தமட்டில், அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மிஞ்சிவிட்டார்கள். சொல்லுவதே சட்டம், வைப்பதே குறிக்கோள் என்று நிறைந்த அளவில் கல்லா கட்டி செழிப்பமாக உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Rathinamoorthy - Palani,இந்தியா
21-ஏப்-201712:24:04 IST Report Abuse
Rathinamoorthy இது பத்திரிகை செய்திக்காகதான். பப்ளிக்ல இப்படி பேசுனா தானே நல்லவரு...... வல்லவரு......இதெல்லாம் ஆகமுடியும். திரைமறைவு உத்தரவு போடாமலா இவரு உள்துறையா இருக்காரு சும்மா உத்தம வேசத்துக்காக உளறாதீங்க உள்துற இதுல உள்குத்து இல்லனா அப்படியே இத ஜி.ஓ போட்டு அரசியல்வாதிய அதிகாரி போட்டுகொடுக்க ஒரு செயலி அதிகாரி லஞ்சம் வாங்கியத பொதுமக்கள் போட்டுகொடுக்க ஒருசெயலி வெளியிடுங்க நெட்வொர்க் பிசில உங்ககுப்பகூட(ஐ) எப்படி நிறைதுனு பாருங்க
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஏப்-201712:41:41 IST Report Abuse
Pasupathi Subbianஇதுதான் ஆரம்பம்....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
21-ஏப்-201712:00:54 IST Report Abuse
ganapati sb ராஜ்நாத்தின் அறிவுரை மிக அருமை. ஆளும் கட்சியிலிருந்து அதிகாரிகளுக்கு நேர்மையாக செயல்படும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது இன்னமும் சாக்குகளை சொல்லி சிறப்பாக செயல்படாத அதிகாரிகள் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட இயலாமையே அல்லது மாற்று கட்சியினால் பயனடைபவர்களே.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201711:29:27 IST Report Abuse
sundaram ராஜ்நாத்சிங் அவர்களே, நீங்க எசமானரா, அரசியவாதியா இல்லே நடிகரா?
Rate this:
Share this comment
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
21-ஏப்-201710:46:22 IST Report Abuse
S.Aruna நல்ல அதிகாரிகளுக்கென பல பொறுப்புக்குறைவான துறைகள் உருவாக்கப்பட்டு ஆட்சியாளர்கள் வசதிக்காக முடக்கப்படுகிறார்கள்.நல்ல அடிமைகளுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்