உதவி மருத்துவ அலுவலர்கள் திறனாய்வுக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவி மருத்துவ அலுவலர்கள் திறனாய்வுக் கூட்டம்

Added : ஏப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: இந்திய மருத்துவம், சித்தா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் துறையில் பணிபுரிந்து வரும் உதவி மருத்துவ அலுவலர்களுக்கான திறனாய்வுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உதவி மருத்துவ அலுவலர்களின் வெளி நோயாளிகளின் இலக்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தற்போது உள்ள மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளித்திடவும், மருந்துகள் இல்லாத நிலை ஏற்படும்போது, வெளிச்சந்தையில் மருந்துகளை கொள்முதல் செய்து பொது மக்களுக்கு வழங்கிட வேண்டும்.மேலும், நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு பெரிய அளவில் நோய் தடுப்பு மருந்தாக பயன்பட்டு வரும் நிலையில் புதிதாக தங்களது திறனை பயன்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய மருந்துகளை கண்டுபிடித்து பொது மக்களுக்கு வழங்கிட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மணிவண்ணன், நேர்முக உதவியாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை