ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை! தொடர்ச்சியாக சிக்குவோருக்கு அபராத தொகை உயரும்| Dinamalar

இந்தியா

ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை! தொடர்ச்சியாக சிக்குவோருக்கு அபராத தொகை உயரும்

Added : ஏப் 21, 2017
Advertisement
ெஹல்மெட், விழிப்புணர்வு, போலீசார், நடவடிக்கை

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் வரும் ௨௪ம் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் விபத்தில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், மே மாதம் ஒன்றாம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்போர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விற்பனை ஜோர்மே மாதம் துவங்க இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஹெல்மெட் வாங்க கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட ஹெல்மெட்களை பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
வரி விலக்குதரமான ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட ஹெல்மெட் ரூ. 750 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஹெல்மெட்டிற்கு, புதுச்சேரி அரசு வரி விலக்கு அளித்துள்ளதால், எம்.ஆர்.பி., விலை ரூ. 950ல் வரி விலக்கு கழித்து ரூ. 830க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கென பிரத்தியேகமான பல வண்ணங்களில், 'லைட் வெயிட்' ஹெல்மெட்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
போலீசார் தயார்ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு, அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் தயாராகி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள நான்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
விழிப்புணர்வுஹெல்மெட் அவசியம் குறித்து, வரும் ௨௪ம் தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து மொபைல் போன்களுக்கும் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு மெசேஜ் அனுப்புவது, பஸ் டிக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம், நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு, சிக்னல்களில் நடன நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பலுான் வழங்குதல், அனைத்து போலீசாரும் ஹெல்மெட் அணிந்து பங்கேற்கும் பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணி, வீதி நாடகங்கள், பட்டிமன்றம் போன்றவை நடத்த போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
அபராதம் எகிறும்ஹெல்மெட் அணியாமல் சென்றால், தற்போது ரூ. 100 ஸ்பார்ட் பைன் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஹெல்மெட் அணியாமல் சென்று சிக்கும்போது, அபராத தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை