சும்மா இருப்பாரா? மாதவனும் ஆரம்பித்தார் கட்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சும்மா இருப்பாரா? மாதவனும் ஆரம்பித்தார் கட்சி

Updated : ஏப் 21, 2017 | Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (136)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தீபா, மாதவன், புதிய கட்சி, எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவை, கருத்து வேறுபாடு, ஜெ., நினைவிடம்

சென்னை : எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் - ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கினார்.


மாதவன் புதிய கட்சி :

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 21ம் தேதி புதிய கட்சி துவங்கப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாதவன் அறிவித்தார்.

புதிய கட்சி துவக்குகிறார் தீபா கணவர் மாதவன்

இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 21) காலை 10.30 மணியளவில் மாதவன், ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது புதிய கட்சியை மாதவன் துவக்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி துவக்கி இருப்பதாக அறிவித்தார். காவிரி விவகாரம், மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். உண்மையான தொண்டர்கள் என்னிடம் இருக்கும் போது போதும். பணம் தேவையில்லை. என்று தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
25-ஏப்-201701:37:33 IST Report Abuse
Paranthaman உண்மையான தொண்டர்கள் என்னிடம் இருக்கும் போது போதும். பணம் தேவையில்லை. என்று மாதவன் தெரிவித்தார். மாதவா உண்மையான தொண்டர்கள் உன்னை நம்பி கொடுத்த பணத்தை சுருட்டி விட்டாயே.இனிமேல் உன் தொண்டர்களிடம் பணம் கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர்களது பணம் தேவை இல்லை என்று சொல்கிறாயா. நீ பிழைத்துக்கொள்வாய்.
Rate this:
Share this comment
Cancel
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201704:18:56 IST Report Abuse
Khalil இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியல நாட்டுல...புண்ணாக்கு விக்கறவன் குண்டூசி விக்கிறவன்லாம் தொழிலதிபர்களாம்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-201721:04:59 IST Report Abuse
Girija நீ பிரடெரிக் குங்கும பொட்டு வச்சுக்கின்னு வாறே, உன் பெண்டாட்டி தீபா (நேற்று, இன்று, நாளை எதோ வசதியோ அப்படி வச்சுக்கோ ) பொட்டு வச்சுக்காம, எதோ ஹாரர் படத்துல நடிக்க போறமாதிரி மேக்கப் போட்டுக்கினு வருது? ஜெ என்ற பெயரை பயன்படுத்த உனக்கு என்ன தகுதி இருக்கு? இதற்க்கு முன் நீ கட்சியில் இருந்தியா? அல்லது ஜெ உன்னை பற்றி எங்காவது குறிபிட்டுள்ளாரா? அல்லது உன்னை சந்தித்துள்ளாரா? நீ என்ன வேலை செய்யற? இத்தனை நாள் எங்கிருந்தாய்? ஜெ கடைசியாக ஜெயிலிலுக்கு போன போது கூட நீ தனியாக ஒரு போராட்டம் நடத்தி உன்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை. அப்புறம் என்ன அம்மா சும்மா?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201719:11:27 IST Report Abuse
ezhumalaiyaan தமிழ்நாட்டுக்கு இப்போ ஏழரை நடந்துகொண்டிருக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
21-ஏப்-201719:06:23 IST Report Abuse
மூ. மோகன் அடக் கடவுளே கட்சிக்கு தலைவன், தொண்டன் எல்லாம் இவர் ஒருத்தர்தானா?
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-ஏப்-201719:01:19 IST Report Abuse
ezhumalaiyaan நேற்று பெய்த மழையில mulaitha kaalaangal
Rate this:
Share this comment
Cancel
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201718:55:41 IST Report Abuse
Khalil என்னமோ போடா மாதவா
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201718:04:32 IST Report Abuse
K.Sugavanam அந்த வண்டி ஓட்டுனர் இன்னும் கட்சி ஆரம்பிக்கலையா?நாளைக்கி பாருங்க அவரும் ஒரு கட்சியை ஒட்டிக்கிட்டு வந்து நிக்கப்போறாரு,அம்மா சமாதில.
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-ஏப்-201716:45:40 IST Report Abuse
Nakkal Nadhamuni இப்போதெல்லாம் பீச்சு பக்கமே போறதில்ல. எங்கயாவது தவறி சமாதி பக்கம் போனா, கட்சி ஆரமிக்கறீங்களான்னு மைக்கை எடுதுன்னு வந்துர்ராங்க இந்த ஊடக காரங்க... சுண்டல் விக்கறவன் மாதிரி எப்பப்பார்த்தாலும் ஊடக ஆட்கள் ஜாஸ்தி ஆயிட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201716:40:49 IST Report Abuse
Endrum Indian அரிப்பெடுத்தால் சொரிந்து கொள்வது இயற்கை, அது போல ஆகிவிட்டது கட்சி ஆரம்பிப்பது என்பது இப்போதைய காலங்களில். அதுவும் என்ன பெயரில் ஒருத்தர் எம்.ஜி.ஆர். அம்மா பேரவை? அம்மா என்றால் உனது அம்மாவா? இன்னொருவர் எம்ஜி.ஆர்.ஜெயலலிதா கட்சி ? எம்ஜிஆர் ஜெயலலிதா என்ன கணவன் மனைவியா??? நாளை தீபக் ஜெயக்குமார் ஒரு கட்சி ஆரம்பித்தால் இப்படி ஆரம்பிக்கலாம் "சிங்கள மலையாள கன்னட தமிழ் திராவிட கட்சி" என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை