சென்னை: பரபரப்பான சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.இவருடன் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், சி.வி.,சண்முகம் ஆகியோரும் வந்துள்ளனர். இங்கு அவசர ஆலோசனையில், கட்சியில் பிளவு பட்டுள்ள இரு அணிகளை இணைப்பது தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது. தினகரல் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்ட பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.
முதல்வர் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வருகை