நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி| Dinamalar

நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தனுஷ், மகன், மதுரை ஐகோர்ட், தடை
Share this video :
தனுசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மதுரை : தனுஷ் எங்கள் மகன் என தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்டம் மேலுார் கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி. 'நடிகர் தனுஷ் எங்கள் மகன். எங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்,' என மேலுார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 'நான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் தனுஷ், மனு தாக்கல் செய்தார். மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தனுஷ் பத்தாம் வகுப்புவரை படித்தார் என்பதற்குரிய பள்ளி மாற்றுச் சான்றை கதிரேசன் தரப்பு தாக்கல் செய்தது. அதில் உள்ள அங்க அடையாளங்களை தனுஷ் மறுத்தார். அப்பள்ளி மாற்றுச் சான்றில் உள்ள அடையாளங்களை உறுதிப்படுத்த, தனுஷூக்கு பிப்.,28 ல் உயர்நீதிமன்றக் கிளையில் அங்க அடையாள சோதனை நடந்தது. சோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் வைரமுத்துராஜூ தலைமையிலான குழு மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலுார் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
தனுஷ் கோரிக்கையை ஏற்று மேலூர் கோர்ட்டில் கதிரேசன் மீனாட்சி தொடர்ந்த வழக்கை நீதிபதி பி.என். பிரகாஷ் தள்ளுபடி செய்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ssssss - Chennai,இந்தியா
21-ஏப்-201720:38:01 IST Report Abuse
ssssss DNA பரிசோதனைக்கு ஏன் தனுஷ் பார்ட்டி ஒத்து கொள்ள வில்லை. ஒரு வேளை, தனுஷ் அம்மா, அம்ம்மா தான். அப்பா வேறு யாராவது இருக்குமோ?? ஒரே குழப்பமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
21-ஏப்-201718:59:20 IST Report Abuse
Sathish பணம் பத்தும் செய்யும். தந்தை என்ன தாயார் என்ன. போங்கடா போங்க.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-201715:45:23 IST Report Abuse
Endrum Indian நான் ஜெயலலிதாவின் மகன் வழக்கு, எங்களது மகன் தனுஷ் என்ற வழக்கு? நிலுவையில் இருக்கின்ற 4 .01 கோடி வழக்குகளில் இந்த மாதிரி வழக்குகள் சேர்க்கவேண்டுமென்றால் டாலிவூட், பாலிவுட், கோலிவுட் எல்லாமே சேர்ந்தால் இந்த மாதிரி வழக்குகள் அதிலே லட்சக்கணக்கான வழக்குகள் வருமே? அது எப்படி இவ்வளுவு நாள் கழித்து தள்ளுபடி செய்தீர்கள் தனுஷ் வழக்கை? எதிலும் முடிவெடுக்கவும், நின்று நிதானித்து ஆற அமர என்றால் வருடமா பல் கடந்து விடும் அதில் பல நீதிபதிகளும் ரிடையர் கூட ஆகிவிடுவார்கள். சட்டு புட்டுன்னு 4 .01 கோடி வழக்குகளை பைசல் பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel
Vimall - Rajapalayam ,இந்தியா
21-ஏப்-201715:22:28 IST Report Abuse
Vimall இங்கு கருத்து கூறியிருக்கும் அனைவரும் தனுஷ் பணம் கொடுத்து நீதியை வாங்கிவிட்டது போல் எழுதியிருக்கிறார்கள். ஏன்? பணம் இருந்தால் அவர் தவறானவர், இல்லை என்றால் நேர்மையானவரா? தனுஷ் பக்கம் கூட உண்மை இருந்திருக்கலாம் அல்லவா? இயக்குனர் விசு அவர்கள் தனுஷ் அவர் குடும்பத்துடன் தான் எடுத்த புகை படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷுக்கு 8 அல்லது 9 வயது என்று கூறியிருக்கிறார். எதுவும் தெரியாமல் ஒருவரை பழித்து கருத்து போட வேண்டாம்.
Rate this:
Share this comment
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
21-ஏப்-201716:06:47 IST Report Abuse
எமன்நண்பர் விமல் அவர்களே, ஒருவேளை கதிரேசன் தம்பதியர் "பொய் வழக்கு தொடர்ந்திருந்தால் அவர்கள் DNA சோதனைக்கு பயந்து ஓடி இருப்பார்களே". சரி நீங்கள் சொல்வது போல் "நடிகர் தனுஷ் களங்கமற்றவர், அவர் மீது போலி உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார்கள்" என்றால், அவர் சம்பாதிக்கிற ஒரு "சில கோடிகள்ல ஏதோ ஒரு தொகையை ஒரு தானமாக நினைச்சு குடுத்தா கூட அது அவருக்கு புண்ணியம்" தானே?...
Rate this:
Share this comment
Guru - chennai,இந்தியா
21-ஏப்-201716:19:23 IST Report Abuse
Guruஅப்படி என்றல் ஏன் பொய்யான தஸ்தாவேஜுகளை தனுஷ் சமர்ப்பித்தார்..தனது படிப்பு சான்று மற்றும் பிறப்பு சான்று சமர்ப்பிக்க ஏன் நேரம் கேட்டார்.பொய் சான்று சமர்பிக்கவா..தனுஷின் ஜாதி சான்று எங்கே..தனுஷ் தன பள்ளிக்கூட நண்பர்களை கொண்டுவந்து சாட்சி சொல்ல வைக்காமல்.தற்போது அவிச்சி பள்ளியில் வாத்தியாராக இருப்பவரை ஏன் பொய் சாட்சியாக உருவாக்கி உள்ளார்.. சிவகார்த்திகேயன் தனுஷ் தன்னுடன் படித்தவர் என்று ஏற்கனவே பல பெட்டியில் சொல்லி இருக்கையில் தனுஷ் எப்படி தான் சென்னை படித்ததாக காட்டுவர்..தனுஷ் மட்டும் இங்கே பொய் சொல்லவில்லை ரஜினி அவர்களும் பொய் சொன்னது மட்டும் இன்றி தனது செல்வாக்கை பயன்படுத்தி உள்ளார்.....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஏப்-201713:39:10 IST Report Abuse
D.Ambujavalli டி. என்.ஏ . எடுத்திருந்தாலும் அதற்குண்டான ரேட்டில் சரி செய்து 'நீதியை' வாங்க மாட்டார்களா ?
Rate this:
Share this comment
Cancel
jiku mathew - Coimbatore ,இந்தியா
21-ஏப்-201712:19:29 IST Report Abuse
jiku mathew Oru dna test pannirkalaam
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
21-ஏப்-201711:14:30 IST Report Abuse
Vasanth Saminathan பிறப்பு சான்றிதழில் கோளாறு, பெயர் மாற்றத்தில் குழப்பம் இதற்கும் மேலாக SC என ஜாதி சான்றிதழில் மோசடி இதெயெல்லாம் என்ன செய்ய போகிறீர்கள் நீதிபதி அவர்களே? இதற்க்கெல்லாம் பணம் வாங்கவில்லையா? சேர்த்து தள்ளுபடி செய்துவிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
21-ஏப்-201711:11:30 IST Report Abuse
Vasanth Saminathan டீ-மானிடைசஷன்ல அமௌண்ட் கிரெடிட் ஆக லேட் ஆகிடுச்சு போல. யோவ் தனுஷ் முன்னாடியே நீதிபதியை கவனிச்சிருந்தா இவ்ளோ பிரச்சினை இல்லேல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.