நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி?

Added : ஏப் 21, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி?

கேள்வி: நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி?
சத்குரு: நீங்கள் பேராசையை வெல்லக்கூடாது. அதை இன்னும் அதிகரித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் பேராசையை வெல்லவேண்டாம் என்று நான் சொல்லக் காரணம், அதை வெல்வது நடக்காத காரியம். 'நான் பேராசையை அடக்கிவிட்டேன்' என்பதெல்லாம் வெறும் நடிப்பு. பேராசை என்றால் என்ன? இருப்பவை எல்லாம் உங்களுக்கே வேண்டும். 'உங்களுக்கே' என்பது என்ன? நீங்கள், உங்கள் குடும்பம்… சிலநேரங்களில் உங்கள் சமூகம். நான் சொல்வதெல்லாம், உங்கள் பேராசையில் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்!

எதற்காக பேராசையைத் துறக்க நினைக்கிறீர்கள்?
எல்லோரையும் சேர்த்துக் கொண்டால், பேராசையும் நல்லது தான். எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது, இந்த முழு பிரபஞ்சத்திற்குமே ஆசைப்படுவது பேராசையின் உச்சம் தான், இல்லையா? இதுதான் ஆன்மீகம். அதனால் இப்போது உங்களுக்கிருக்கும் பேராசை போதாது. தயவுசெய்து உங்கள் பேராசையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பேராசையை சுருக்க நினைக்காதீர்கள். அதை எவ்வளவு முடியுமோ, எந்த அளவிற்கு அது விரிவடையுமோ, அந்த அளவிற்கு அதை விரியச் செய்யுங்கள்… அப்போது நீங்கள் அற்புதமாக வாழ்வீர்கள். நான் மிகுந்த பேராசைக்காரன். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நான் அறிந்திருப்பது போல் வாழ்வை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரே ஒருவர் கூட இந்த சாத்தியத்தை உணராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். எப்படியாவது இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நான் மிகமிக அதிகமாக பேராசை கொண்டவன். ஒரு பத்து பேரையோ, பத்தாயிரம் பேரையோ இல்லை பத்து லட்சம் பேரையோ இது எட்டினாலும் போதாது. இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் இது சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
29-ஏப்-201723:25:27 IST Report Abuse
ஏடு கொண்டலு போலி ஆன்மிகம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-ஏப்-201720:17:52 IST Report Abuse
மலரின் மகள் தினமலரில் பழமொழிகளை பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதன் பிறகு நான் பழமொழிகள் பற்றி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பேராசை பெரு நஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
23-ஏப்-201710:32:34 IST Report Abuse
Paranthaman அம்பானியிடம் தனி மனித திறமைகள் இருந்தன.அத் திறமைகளை முறையற்ற வழிகளில் பணம் பண்ண பயன்படுத்தினார்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
23-ஏப்-201710:24:50 IST Report Abuse
Paranthaman பேராசையற்ற வாழ்வே தம்மை மாமனிதனாக்கும் முயற்சி.பரிணாம வளர்ச்சி அதை நோக்கித்தான் செல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
23-ஏப்-201710:21:03 IST Report Abuse
Paranthaman ஆசைகளின் தூண்டுதலை தவிர்த்து நல்ல நெறிகளுடன் வாழ்வது எளிதல்ல. ஆனால் அது தான் வாழ்க்கை.போராட்டம். வானமிங்கு தென்படவேண்டுமென்று பாரதி ஆசைப்பட்டார். ஆசையின் திறவு கோலாக லட்சியம் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
23-ஏப்-201709:56:42 IST Report Abuse
Paranthaman துன்பத்திற்கு ஆசையே காரணம் .ஆசையை தவிர்க்கவேண்டும் மென்று யோகிகளும் ஞானிகளும் போதித்துள்ளனர். ஆனால் மிஸ்டர் ஜக்கி பேராசையை விரிவு படுத்த சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
21-ஏப்-201713:42:26 IST Report Abuse
rajarajan ஊருக்கு உபதேசம் ஆனா நீங்க மட்டும் 36 ஏக்கருக்கு அனுமதி வாங்கிவிட்டு 400 ஏக்கரை வளைத்துக் கொள்ளலாம். எதற்காக இந்த மண் ஆசை. மற்ற சாமியார்கள் போல் இன்ஜினியரிங் காலேஜ் மெடிக்கல் காலேஜ் கட்டி பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் ஏதும் உண்டா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை