Sathyaraj says apology regarding Bahubali 2 problem in Karnataka | கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட ‛கட்டப்பா'| Dinamalar

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட ‛கட்டப்பா'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
sathyaraj, bahubali, karnataka, கன்னடர், மன்னிப்பு, கட்டப்பா
Share this video :
கன்னடர்களிடம் மன்னிப்பு கோரினார் சத்யராஜ்

சென்னை : பாகுபலி-2 படத்திற்கு கர்நாடாகாவில் எழுந்த பிரச்னையை தொடர்ந்து, அப்படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார்.'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் அனுமதி மறுத்து வருகின்றன. 9 வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன. சத்யராஜை எதிர்த்தும், பாகுபலி 2 பட வெளியீட்டை எதிர்த்தும், 'பாகுபலி 2' படம் உலகம் முழுவதும் வெளியாகும் நாளான ஏப்ரல் 28ம் தேதி பந்த் ஒன்றை நடத்த உள்ளார்கள். ஒரு திரைப்படத்தை எதிர்த்து பந்த் நடத்தும் அளவிற்கு கன்னட அமைப்புகள் இறங்கிப் போயுள்ளன.இதுதொடர்பாக ராஜமெளலி கூட தன் வருத்தத்தை பதிவு செய்திருந்தார். சத்யராஜின் தனிப்பட்ட கருத்துக்காக பாகுபலி-2 படத்தை எதிர்ப்பது சரியல்ல. ஒருவர் பேசிய கருத்துடன் பாகுபலி-2 படத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது...


சத்யராஜ் மன்னிப்பு

வணக்கம், 9 வருடங்களுக்கு முன் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். இதுதொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கண்டன போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதற்காக எனது உருவப்பொம்பை எரிக்கப்பட்டது, கன்னட திரையுலகினர் சிலரும் ஆவேசமாக பேசியிருந்தனர். அதில் நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக நான் அறிகிறேன். அதற்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.


தமிழர்கள் வருத்தப்பட வேண்டாம்

இதற்காக என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மக்களும், நலம்விரும்பிகளும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான். என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரையமாக விரும்பவில்லை. அதுமட்டுமல்ல பாகுபலி-2வை கர்நாடகாவில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டமடைய வேண்டாம்.


தமிழர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்

ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்னையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.


தமிழனாய் இருப்பதே மகிழ்ச்சி

இப்படி நான் செய்வதால், என்னை வைத்து படம் தயாரித்தால் பிரச்னை வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள், இந்த சின்ன நடிகனான சத்யாரஜை யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டாம். என்னை யாரும் அணுக வேண்டாம், என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி.


படத்தை வெளியிட ஒத்துழையுங்கள்...

ஆகவே எனது வருத்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்படி கேட்டு கொள்கிறேன். என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி மற்றும் பாகுபலி தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (320)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaichelvan k.s. - coimbatore,இந்தியா
24-ஏப்-201720:12:24 IST Report Abuse
kalaichelvan k.s. முட்டாள் தனமா 9 வருடத்திற்கு பிறகு ஒரு சாதாரண நடிகனுக்கு எதிராக கோரிக்கை வைத்தால் அதை கேட்டுக்கொண்டு பின்னால் வருகிற மக்களை சொல்ல வேண்டும். நல்லது கேட்டது தெரிந்து மக்கள் நடப்பது எப்போது? கன்னடர்கள் சத்யராஜை ஹீரோ ஆக்கிவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
SAM - CHENNAI,இந்தியா
24-ஏப்-201714:01:52 IST Report Abuse
SAM தயவு செய்து அவர் பேசிய வீடியோவை நன்றாக கேளுங்கள். இப்படி இவனுக போடுற நியூஸ் எல்லாத்தையும் நம்பாதீங்க. வருத்தம் தானே சொன்னாரா தவிர மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை அவர் சொல்லவே இல்ல. தயவு செய்து கண்ட ...ல்லாம் இவரோட ஒப்பிட்டு பேசாதீங்க. ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி. இந்த ஒரு வார்த்தையை உங்க ரஜினி சொல்ல சொல்லுங்க பார்க்கலாம். ஜல்லிக்கட்டுகு ஆதரவுனு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அப்புறம் பிரச்சனை வந்தவுடன் ஒரு பக்கத்துக்கு த்விட்டேர்ல மெசேஜ் போட்டுறாரு. இவரு நல்லவரா? ஏழைக்கு திருமணமண்டபம் கட்டுனாருனு சொல்லுறிங்களே? பொய். போய் அந்த திருமணமண்டபத்துக்குள்ள பாருங்க. உண்மை புரியும். ஜல்லிக்கட்டு விசயத்துல இவரு பேசின ஒவ்வொரு மெசேஜ் பாருங்க. உங்களுக்கும் புரியும். ஒரு தமிழனா அடிச்சா இன்னொரு தமிழனுக்கு வலிக்கனும். அவன்தான் தமிழன். மன்னிப்பு என்பது வேறு. வருத்தம் என்பது வேறு. போய் தமிழ் அகராதி எடுத்து பாருங்க. பேச வந்துடீங்க. முட்டாள் பசங்கள.
Rate this:
Share this comment
Cancel
Only Real No politics - Chennai,இந்தியா
22-ஏப்-201714:08:05 IST Report Abuse
Only Real No politics ஒரு வேல தன் கன்னட உறவுகளை வைத்து ரஜினி செய்த வேலையாக இருக்குமோ......................
Rate this:
Share this comment
Cancel
Rahim - Jubail,சவுதி அரேபியா
22-ஏப்-201712:55:29 IST Report Abuse
Rahim 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலமாடு பேசியது இன்று அவருக்கே எதிராக திரும்பியுள்ளது , அன்று இரு மாநிலத்திற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தும் விதமாக பேச வேண்டிய இந்த எட்டப்பன் மேலும் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் எண்னெயை ஊற்றும் வண்ணம் பேசி கிளப்பி விட்டார் , முழுக்க முழுக்க மேடையில் இருந்த ரஜினியை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர சிந்தித்து பேச வில்லை இந்த பொய்த்தமிழன், வாட்டாள் நாகராஜை பற்றி பேசும்போது தமிழ் நாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தும் அவனை அடித்து விரட்ட வேண்டும் என்றுதான் ரஜினியும் பேசினார் எனவே எதோ இந்த பொய்த்தமிழன் சத்யராஜ் மட்டுமே தமிழகத்தை காக்க வந்த தெய்வம் என நினைக்க வேண்டாம் , ரஜினியை கன்னடராக மட்டுமே சித்தரித்து பொறாமையில் பொங்கும் இந்த நடிகனுக்கு தில்லிருந்தால் தான் திரைத்துறையில் எப்படி வளர்ந்தோம் என சொல்லும் தைரியம் இருக்கிறதா ? ரஜினிக்கு வில்லனாக அடியாளாக நடித்து தான் இந்த மலமாடு இந்த வளர்ச்சியை அடைந்தது அப்போதே பொங்கி இருக்க வேண்டும் இந்த தமிழர் பாசம்,கடந்த ஆண்டு தமிழர்கள் தாக்கப்பட்டபோது அவர்களின் உடமைகளை சூறையாடப்பட்ட போது இந்த வீரர் எந்த கண்டனமும் தெரிவிக்க வில்லை அதற்கும் பாகுபலி தான் காரணம் எங்கே எதிர்ப்பு வந்து பிழைப்பில் மண் விழுந்து விடுமோ என்ற பயம் தான் காரணம் ஆக மொத்தம் பொழப்பு ஓட வேண்டும் என்றால் இவருக்கு தமிழன் என்ற உணர்வு மாடு மேய்க்க போய்விடும் மற்ற நேரம் அரிதாரம் பூசி நடிக்க வந்துவிடும், இன்று போல வெளி மாநில மொழி படங்களில் நடித்து பிழைப்பு ஓட்டும் நிலைமை அன்று இருந்திருந்தால் பாவம் அப்படி பேசி இருக்க மாட்டார், அன்றைக்கு தமிழிலில் முன்னனி ஹீரோ அதன் மூலம் டப்பு வந்து கொண்டிருந்தது அதான் அண்ணன் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார், ஆமாம் அப்படி தமிழுக்கும் தமிழருக்கும் இவர் ஆற்றிய தொண்டு தான் என்ன ? மேடையில் அடித்தொண்டையில் கத்தி கொண்டு யாரும் பேசலாம் , அப்படி பேசும் நடிகர்களில் இந்த ஒசந்த நடிகரும் ஒருவர் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Sriram - Chennai,இந்தியா
22-ஏப்-201716:06:44 IST Report Abuse
Sriram இதை நான் ஆதரிக்கிறேன் ரஹீம் அவர்களே. உண்மை ,, முற்றிலும் உண்மை,,...
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
22-ஏப்-201712:36:27 IST Report Abuse
suresh கன்னட திரைத்துறையினர் தமிழகத்திற்கு எதிராக வாய்க்கு வந்தபடி துணிச்சலாக பேசுகின்றனர், காரணம் அவர்களின் மார்க்கெட் கர்நாடகத்துள் தான், ஆனால் தமிழக முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் வெளி வருகிறது, இது தான் சத்யராஜ் அவர்களை வருத்தம் தெரிவிக்க வைத்தது, இன உணர்வுக்கும் தொழிலுக்கும் இடையே தமிழ் திரைத்துறை சிக்கி தவிக்கிறது, ஆழ்ந்து சிந்த்தித்தால், இதில் தமிழகம் தலை நிமிர்த்து உள்ளது, கன்னட திரை படங்களை இலவசமாக தமிழகத்தில் திரையிட்டாலும் ஒரு தமிழனை கூட அந்த திரையரங்கில் பார்க்க முடியாது, ஆனால் தமிழ் முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை கர்நாடகத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட பார்க்க கன்னடர்கள் தயாராக உள்ளனர், பெங்களுருவில் உள்ள ஓர் திரையரங்கில் பாட்ஷா படம் நான் பார்த்து கொண்டு இருந்த போது ஓர் மொழி பெயர்பாளரை அழைத்து வந்து படம் பார்த்து கொண்டு இருந்த ஓர் கன்னடர் தற்போது என் நினைவில் வருகிறார். சத்யராஜ் அவர்களுக்கு எதிரான போராட்டம் தமிழகம் உயர்ந்து நிற்பதையே காட்டுகின்றது.
Rate this:
Share this comment
Cancel
Balaji -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201712:09:48 IST Report Abuse
Balaji Under what circumstances the actor has conveyed his thoughts balancing everything. How Dinamalar has given the heading highlighting one aspect. Do anybody have doubt about the daily .For whom it stands for.
Rate this:
Share this comment
Cancel
SINGAM - chennai,இந்தியா
22-ஏப்-201711:40:46 IST Report Abuse
SINGAM ஆகவே இளிச்சவாய் தமிழ் மக்களே இந்த சினிமா கரங்களை ஒட்டு மொத்தமா புறக்கணியுங்கள் - அரசியல் பேசினால். நடிப்போட பொத்திகிட்டு இருக்கவும். தமிழகத்தை நல்ல மாணவர்கள் காப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Only Real No politics - Chennai,இந்தியா
22-ஏப்-201711:29:26 IST Report Abuse
Only Real No politics பணத்திற்கு விலைபோகாமல் உரிமைக்காக போராடிய கன்னட மக்கள் மற்றும் கன்னட அரசின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது, நாங்கள் இந்தியர்கள் இல்லை கன்னடர்கள் தான் என்பதை அவர்கள் நிரூபித்துவிட்டார், இந்த அவமானத்தை தமிழன் புரிந்து கொள்ள வேண்டும், நிகழ்காலத்தில் தமிழன் பட்ட அவமானத்தை மறந்தால் எதிகாலத்தில் தமிழன் அழிவை தான் சந்திக்க வேண்டும், என்னடா இது, சத்யராஜுக்கு வந்த சத்திய சோதனை, என்னால் மற்றவர்கள் நஷ்டப்பட கூடாது என்று நினைக்கும் உங்களை நான் புரிந்து கொண்டேன், எங்களுக்காக குரல்கொடுத்த உங்களை விமர்சிக்க நான் விரும்பவில்லை, கடந்த கால அவமானங்களை புரிந்து கொண்டு எதிர்காலத்தை புரட்சிகரமாக அமைத்து கொள்ள வாழ்த்துக்கள்..............
Rate this:
Share this comment
Cancel
அதியமான் - chennai,இந்தியா
22-ஏப்-201711:25:34 IST Report Abuse
அதியமான் அவரை குறை சொல்பவர்கள் கன்னட வெறியர்களின் செயலை நியாயப்படுத்துகிறீர்களா ?? கன்னட வெறியர்கள் தமிழர்களின் பொறுமையை நிரம்பவே சோதிக்கிறார்கள்...ஏதற்கும் முடிவு வரும் விரைவில்...
Rate this:
Share this comment
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
22-ஏப்-201711:12:49 IST Report Abuse
Mohan Nadar சத்தியராஜ் செய்தது சரிதான். தமிழன் ஓன்றும் தலை குனிந்து போகவில்லை. தமிழனை படத்தில பாத்தாலே பயப்படுறே அளவுக்கு கர்நாடக சென்று விட்டது. தமிழனின் பலம்தான். வாக்கு கொடுத்த எவனுக்கும் கேடு செய்ய மாட்டான் என்பதிற்கு சத்தியராஜ் எடுத்துக்காட்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.