புதுடில்லி: பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனையில் எதிர்பார்த்த முடிவு கிடைத்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார். வங்க கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இந்திய ரஷ்யா நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவான சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகள் 2007ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.