சென்னை: அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் வீட்டில் முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறியதாவது: முதல்வர் தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மக்கள் மற்றும் தொண்டர்கள் நலனை கொண்டு, எங்கள் தரப்பில் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.