அதிக விலை கொடுக்க வேண்டிவரும்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல்

புதுடில்லி: தலாய்லாமாவை துருப்பு சீட்டாக தொடர்ந்து பயன்படுத்தினால், இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என சீனா கூறியுள்ளது.
இது தொடர்பாக சீன அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பத்திரிகையில் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தலாய்லாமா சொன்னார் என்பதற்காக அருணாச்சல்லின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது என இந்தியா கருதக்கூடாது. சீனாவுக்கு எதிராக தலாய் லாமாவை இந்தியா முக்கிய கருவியாக பயன்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் அருணாச்சல்லில் 6 இடங்களின் பெயர்களை ஏன் மற்றப்பட்டது என்பதை இந்தியா தீவிரமாக யோசிக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக தலாய் லாமாவை முக்கிய துருப்பு சீட்டாக பயன்படுத்துவது என்பது புத்திசாலித்தனம் அல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால், இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எல்லையில் நிலவும் பிரச்னையை தீர்க்க சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அந்த செய்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TTParthasarathy - Chennai,இந்தியா
22-ஏப்-201710:30:56 IST Report Abuse
TTParthasarathy இது சீனாவின் ரௌடித்தனமான போக்கை காட்டுகிறது.எல்லாரையுமே அது மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைக்கிறது.இதற்கு நாம் அனுமதிக்க கூடாது.அதற்கு முதலில் இறக்குமதியை நிறுத்தவேண்டும் திபெத் சீனாவின் பகுதி அல்ல என்று அறிவிக்கவேண்டும்.திபெத்தியருக்கு தனி விசா வழங்க வேண்டும்.திபெத்தியரை மட்டுமே கொண்ட தனி ராணுவப்படை அமைத்து சீன எல்லையில் நிறுத்த வேண்டும்.நம் ராணுவத்தை மேலும் நவீனமாக ஆக்க வேண்டும்.அமெரிக்கா ஆஸ்திரேலிய ஜப்பான் இவற்றோடு ராணுவ ஒப்பந்தம் போடவேண்டும்.இப்படி செய்தல் சீனா நம்மிடம் வாலாட்டாது.அதன் மிரட்டலுக்கு பயப்படாமல் தலாய்லாமாவுக்கு எங்கும் போக அனுமதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kalai Aarashan - Quito,ஈக்வடார்
22-ஏப்-201709:38:28 IST Report Abuse
Kalai Aarashan யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல அன்டன் காகா(சீனா) குருவிகளுக்கு வேதம் புரியல...வேதம் புரியல............................ யாரு யாருக்கு சொல்றது?
Rate this:
Share this comment
Cancel
Jey Kay - Melbourne,ஆஸ்திரேலியா
22-ஏப்-201706:22:01 IST Report Abuse
Jey Kay இந்தியா உடன்னான சீனாவின் வர்த்தகம் ஆண்டுக்கு 7,250 கோடி அமெரிக்க டாலர். இதை இழக்க சீனா விரும்பாது, அதுமட்டும் அல்லாமல் ஏனைய உலக நாடுகளும் இந்தியாவில் நிறைய முதலீடு செய்துள்ளது, இந்தியாவின் பெரிய வர்த்தக சந்தையையும் நம்பியுள்ளது. அதனால் போர் சூழும் நிலை உருவாகும் நிலையில் அதை உலக நாடுகள் அதை தனித்து விடும் . இதையும் மீறி போர் சூழ்கிறது என்று ஒரு கற்பனைக்கு எடுத்துக்கொள்ளவோமே. இரு நாடுகளும் அணுஆயுதத்தை கட்டாயம் உபயோகப்படுத்தாது. போர் பல நாட்கள் நீளும். நமக்கு துணையாக ஜப்பான், வியட்நாம் துணை நிர்க்கும், சீனாவிற்கு துணையாக வடகொரியா போரிடும், அது தென் கொரியாவை தாக்கும். இந்த செயல் அமெரிக்காவையும் போரினுள் இழுக்கும். உலகமே பேரழிவை சந்திக்கும். இந்தியா சீனா 100 ஆண்டுகள் பின்னோக்கி நகரும். அனைத்தையும் சீனா நன்கு அறியும். இத்தனை நாட்கள் தான் பாடு பட்டு சேர்த்த பொருளாதாரத்தை சீனா ஒரு பொழுதும் இழக்க விரும்பாது. அவ்வப் பொழுது எல்லையில்அறசல் புறசல் இருக்குமே ஒழிய சீனா ஒருபொழுதும் போர் புரியாது. இந்தியா 1962ஐ விட தற்பொழுது வலிமையான நிலையில் இருக்கிறது என்பதை சீனா நன்கு அறியும்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-ஏப்-201705:55:05 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சுதந்திரம் கிடைச்சு இன்னிவரை எந்த நாட்டின்மீதும் ஆக்கிரமிப்பே செய்யலீங்க எங்கள் இந்திய தேசம் , ஸீனாக்காரனும் பாகிஸ்தானும் தான் அடாவடி செய்றானுக அடக்கிவைக்கவேண்டும் இதுகளை பாவம் மோடி உள்நாட்டு அவலங்களையே சரி செய்யமுடியலே , அவ்ளோ தொள்ளைபிடிச்சு நடக்குறானுக்கோ
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
22-ஏப்-201703:47:57 IST Report Abuse
Vetri Vel என்ன குஜராத் தேநீர் விருந்துக்கு அழைப்பு வரலியா... அதுக்கு இப்படியா...இருக்கவே இருக்கு.. அம்பானி அதானி கும்பலை அனுப்பி வைக்கிறோம்..... வாய் சொல் வீரர் எங்கே..? பதுக்கி இருக்கிறார் இன்னும்... நீயா நானா னு காமிக்க வேண்டாமா.. சீனா காரனுக்கு..
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201703:01:23 IST Report Abuse
மலரின் மகள் தங்களை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடனும் இவர்கள் மிரட்டல் போக்கி காண்பிக்கிறார்கள். அனைவருமே சீனாவை ஒதுக்கி வைத்து நம்பிக்கைக்கு உதவாதவர்கள் என்று தான் வைத்திருக்கிறார்கள். நமது நட்பு நாடுகள் இவர்களை சுற்றி உள்ளன அவைவளும் இவர்களுக்கு எதிரியாக இருக்கின்றன. சீனாவால் தற்போதைய நிலைமையில் அவ்வபோதைக்கு ஜம்பம் அடித்து கொண்டே இருக்க முடியும். ஆனாலும் நாம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும். அப்படிதான் இருக்கிறோம். மோடியின் ஆட்சியில் ஃபிராண்டையர் பகுதியில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். வாடா கிழக்கு இந்தியா உண்மையில் ஜோராக இருக்கிறது பழைய நிலைமையை பார்க்கும் போது. இனி நாம் அந்த பிரதேசம் வழியாக ரயிலிலேயே கம்பூசியாவின் அங்கோர்வாட் கோவில்களுக்கு சென்று வரலாம். சோழ சாம்ராஜ்யத்தின் மகத்துவத்தை தமிழ் அரசர்களின் பண்டைய பாரம்பரித்தை அங்கே சென்று களிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
22-ஏப்-201700:14:21 IST Report Abuse
kuppuswamykesavan ///அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா 21-ஏப்-2017 18:33 சீனாக்காரன் பொருளை இறக்குமதி செய்யாமல் விட்டாலே சரியாகி விடுவான்................ K.Sugavanam - Salem,இந்தியா 21-ஏப்-2017 18:33 உங்க கைப்பேசி என்ன மேக்கு?அத மொதல்ல சொல்லுங்க ஜி..உங்க கணினி எந்தூரு ப்ரொடக்ட்டு?power bank என்ன brand ?///............ ஆமாங்க இந்த டிஜிட்டல் துறையில், தரம் இருக்கோ இல்லையோ, இந்த சீனனின் எலட்ரானிக்ஸ் பொருட்கள், நம் இந்திய சந்தையில் மிக அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகிறது. நம்ம பணம் அவனிடம் குவிவதால் அவன் ஆட்டம் போடுகிறான். Be indian buy indian's. இந்த நிலை மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் நவீன டெக்னாலஜியை சமகாலத்தில் நாமும் பயன்படுத்த அன்னிய பொருட்களை வாங்கியதாலும், நம் இந்திய கம்பெனிகள் நவீன டெக்னாலஜியில் பின்தங்கிவிட்டதுமே எனலாம். இதற்கு மாற்று வழிகள் கண்டு, நாம் சீன பொருட்களை புறக்கணிக்கலாம். நாம் வேறு நாட்டிடம் இருந்து பொருட்கள் வாங்கினாலும், அதே போன்ற போலி பொருட்களை உருவாக்குவதிலும் சீனன் எக்ஸ்பர்ட்டானவன் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
N.K - bochum,ஜெர்மனி
21-ஏப்-201722:24:52 IST Report Abuse
N.K ஆமாம், சீனாவின் டப்பா பொருட்களை தடைசெய்தபின், சற்று அதிக விலை கொடுக்கவேண்டிவரும்தான். அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Viji Ram - kovai,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201722:00:31 IST Report Abuse
Viji Ram நமது admk , dmk மற்றும் காங்கிரஸ் போன்ற ஊழலில் உளுத்து போன, டெக்னாலஜி-கு , வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத , அதை பற்றிய எந்த அறிவும் இல்லாத , படிக்காத , உலக நடப்பு தெரியாத களவாணிகள், அவர்களுக்கு காசு வாங்கி ஒட்டு போடும் , தறுதலை கூட்டம் உள்ளவரை , உலகத்தில் நம்மை பர்மா கூட விரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
jagadeesan - Hosur,இந்தியா
21-ஏப்-201721:31:53 IST Report Abuse
jagadeesan சீனாவின் தற்போது நிலைமை நான் உயிரோடு இருக்கிறான் என்று உலகத்துக்கு காட்டவே இப்படி ஒரு மிரட்டல் ஆனால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்ட வருகிறான் என்பது உண்மை. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு சீனா.இனி போரில் இவர்களை பயன்படுத்துவது சீனாவுக்கு kashtame
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
22-ஏப்-201706:05:08 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஇதை சாமி சின்னத்தம்பி சொல்லட்டும் சார், ஏனென்றால் அவர் அங்கே இருக்கிறார் என்று நம்புகிறேன்...
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
22-ஏப்-201706:08:39 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஇந்த கட்டுரை தந்த வேதனை விட கருத்துக்கள் தான் வேதனையை தருது, கணினி முதல், மொபைல் வரை, நம்ம வைகுண்ட ராஜன் தாது க்கள் ஏற்றுமதி செய்து அவன் மட்டுமே பணக்காரன் ஆகா வேண்டும் என்று முயல்கிறார்ன், ஆனா அவர்களோ நமக்கே அதனை பொருளாய் செய்து அனுப்பி கொழிக்கின்றனர், இங்கு கருத்து கூறியுள்ள எவரும் வைகுண்ட ராஜனையோ, இல்லை அவனை போல 31 திருடர்களையோ குறை கூறவில்லையே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்