கூடுதலாக 2 மாத அவகாசம்; சசிகலா, பன்னீருக்கு உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
கூடுதலாக 2 மாத அவகாசம்
சசிகலா, பன்னீருக்கு உத்தரவு

புதுடில்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை அளிப்பதற்கு, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பின ருக்கு, மேலும், இரண்டு மாத அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

 கூடுதலாக, 2 மாத, அவகாசம், சசிகலா, பன்னீருக்கு, உத்தரவு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்புக்கும் இடையில் உரிமை பிரச்னை இருந்து வருகிறது.

தங்களுக்குத்தான் சின்னத்தை வழங்க வேண்டும் என்று கோரி, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு முறை, இரு தரப்பினரையும் அழைத்து தேர்தல் ஆணையம் விசாரித்தது.
அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும், வாதங் களை எடுத்து வைத்து வாதிட்டனர். இறுதியில், இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் வழங்கா மல், தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

அதன் பின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, சசிகலா அணிக்கு, 'தொப்பி' சின்னமும், பன்னீர் செல்வம் அணிக்கு, 'இரட்டை விளக்கு மின்கம்பம்' சின்னமும் வழங்கிய தேர்தல்ஆணையம், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக, ஏப்.17ம் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தினகரன் தரப்பு, தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை

Advertisement

வைத்திருந்தது. நேற்று இந்த விவ காரம் தொடர்பாக, கூடுதல் ஆவணங் களை வரும், ஜூன், 16ம் தேதிக்குள் வழங்கும்படி, இரு தரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, இரு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் முறைப்படி, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-ஏப்-201720:10:33 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇரண்டு கோஷ்டிகளும் இணைந்து விட்டால் தேர்தல் ஆணையம் ஈசியாக தப்பித்துக்கொள்ள பார்க்கிறது. தற்போது மெஜாரிட்டி யாருக்கு உள்ளதோ ஆட்சி செய்கிறதோ அதுதான் அதிமுக .சின்னம் பற்றி குழப்ப வேண்டாம் .அதனால்தானே சில விளைவுகளை சந்திக்கவேண்டியாகிறது ..தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம்..அடுத்த பொது தேர்தலுக்கு மக்களிடம் பார்த்து கொள்ளட்டும். அப்போது இரு அணிக்கும் சுயேட்சை சின்னம் வழங்கிடனும். இதுதான்சரியான தீர்வாக அமையும். வழக்கு நிலுவையில் இருக்கட்டும்.மெஜாரிட்டி உள்ளவருக்கே தற்போது இரட்டை இலை பற்றி சர்ச்சை வேண்டாம். அடுத்த தேர்தலின் போது பார்த்துக்கொள்ளலாம்..சின்னம் விவகாரம்...என >>>>>>>>>>>>>தேர்தல் ஆணையம் இதுவரை யாருக்காவது தண்டனை கொடுத்துள்ளதா ? பொய் வாக்காளர சேர்ப்பு >>.பட்டியல் பற்றி>>>>

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
22-ஏப்-201709:37:42 IST Report Abuse

Rajendra Bupathiஇதுக்கும் வெயிட்டை போட்டு உட்டுட்டாங்களா?பணம் பாதாளம் வரை பாயுங்கறது சும்மாவா சொன்னாங்க?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஏப்-201709:12:51 IST Report Abuse

Srinivasan Kannaiyaதலைவலியாக இருக்கிறது... கொஞ்சம் காஃபீ சாப்பிட நேரம் கேட்டு இருக்கிறார்கள்... எல்லாவற்றையும் ஆற போட்டு இருவருக்கும் இரட்டை இலை இல்லை என்று சொல்லிவிடலாம்... எப்பவுமே... காலம் தாழ்த்தி குடுக்கப்படும் தீர்ப்புகள் காயத்திற்கு மருந்தாக கூட அமையும்...

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
22-ஏப்-201707:53:40 IST Report Abuse

Paranthamanஅதிமுகவை வழி நடத்த வலுவான தலைமை இல்லை. அதிமுக அழிவுக்கு காரணம் பதவிகளையும் பணத்தையும் காட்டி 122 எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் கொண்டு போய் மறைத்து கும்மாளம் அடிக்க வைத்த சசிகலா முக்கிய காரணம். இதற்கு சரியான தீர்வு தமிழகம் எதிர் தோக்கும் சட்டம்ன்ற மறு தேர்தல். அதிமுகவினர் இன்னும் நான்காண்டுகள் வரை ஏட்டிக்கு போட்டியாக ஆட்சி செய்து இப்படியே மக்களை குழப்பி குளிர் காய்ந்து கடைசியில் கஜானாவை காலியாக விட்டு செல்வார்கள். நல்ல க்ட்சி ஆட்சியில் ஊடுறுவிய சுரண்டல் கூட்டம்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201707:23:14 IST Report Abuse

Kasimani Baskaranஇப்பொழுது இருக்கும் நிலையில் அதிமுக ஆட்சியை தொடர்வது கஜானாவுக்கு நல்லதல்ல... ஏற்கனவே திவாலாகும் நிலை... இதில் இவர்கள் வேறு விளையாடினால் ஊழியர்களுக்குக்கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை வரலாம்...

Rate this:
Shree Ramachandran - chennai,இந்தியா
22-ஏப்-201701:20:03 IST Report Abuse

Shree Ramachandranithu ஜெயலலிதா ஊழல் வழக்கு போல பதினெட்டு ஆண்டு விழா கொண்டாடும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement