வசூல் வேட்டைக்கு ஒத்துவராத பதிவுத்துறை ஐ.ஜி., மாற்றம்! சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்ததன் பின்னணி Dinamalar
பதிவு செய்த நாள் :
வசூல் வேட்டைக்கு ஒத்துவராத பதிவுத்துறை
ஐ.ஜி., மாற்றம்! சீனியர் ஐ.ஏ.எஸ்.,
அதிகாரியை நியமித்ததன் பின்னணி

கோவை:பதிவுத்துறையில் பணம் வாங்கிக் கொண்டு பணி மாறுதல் செய்வதற்கு ஒத்துழைக்காத ஐ.ஜி., செல்வராஜ், அதிரடியாக மாற்றப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தி லுள்ள ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கி யிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வசூல் வேட்டை, ஒத்து,வராத, பதிவுத்துறை, ஐ.ஜி., மாற்றம்,

தமிழக பதிவுத்துறையில், 50 மாவட்டப் பதி வாளர்கள் (நிர்வாகம்), 50 மாவட்டப் பதிவாளர் கள் (தணிக்கை) மற்றும் 572 சார் பதிவாளர் பணியிடங்கள் உள்ளன. முன்பெல்லாம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, இவர் களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்; ஆண்டு தோறும் மே மாதத்தில், பொது மாறுதல் நடந்தா லும், ஒரே பணியிடத்தில், ஒவ்வொரு அலுவல ரும், மூன்று ஆண்டுகள் வரை பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

இவற்றில், வருவாய் அதிகமுள்ள பணியிடங் களுக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் பரிந்துரையின்படி, நான்கு அல்லது ஐந்து லட்ச ரூபாய் வரை பேரம் நடக்கும்; ஆனால், 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த நடைமுறையில் பெரும் மாற்றம் வந்தது. அதாவது, வருவாய் அதிக முள்ள பணியிடங்களுக்கு, ஆண்டுதோறும், 'கட்டாய பணி மாறுதல்' வழங்கப்படுகிறது.

அதுவும், குறைந்தபட்சம், 25 லட்சம் ரூபாயில்

துவங்கி, 40, 50 லட்சம் என்று, 'வருமானத்துக் கேற்ற லஞ்சம்' வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பதிவுத்துறை உதவியாளர்களுக்கு சார்பதிவாளர் களாகவும், சார்பதிவாளர்களை மாவட்டப்பதிவாள ராகவும் பதவி உயர்வு வழங்கு வது என எதுவுமே, லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை. ஜெ., மறைவுக்குப் பின், இந்த வசூல் வேட்டை, பல மடங்கு அதிகமாகிவிட்டது.

சமீபத்தில், பதிவுத்துறை அமைச்சர் வீரமணியின் உதவியாளர் ஒருவர், பதிவுத்துறையில், 'பசை' யுள்ள பணியிடங்களின் பட்டியலைத் தயாரித்து, அந்த இடங்களில், 'போஸ்ட்டிங்' போடுவதற்கு பலரிடமும் 30 லட்சம், 40 லட்ச ரூபாய் என்று பகிரங்க பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. இதன்படி, பெரிய வசூல் வேட்டை நடத்திய அந்த நபர், பணி மாறுதல் பட்டியலைத் தயாரித்துள்ளார்.

அந்த பட்டியலை ஐ.ஜி.,யிடம் கொடுத்து, பணி மாறுதல் உத்தரவில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந் தம் செய்துள்ளார். இதற்கு, அமைச்சரும் ஆதரவு தந்துள்ளதாகத் தகவல்கள் தெரிய வந்துள்ளது. ஆனால், ஐ.ஜி.,யாக இருந்த செல்வராஜ், இதற்கு மறுத்ததோடு, 'பணி மாறுதலுக்கு யாருக்கும் பணம் தரத் தேவையில்லை' என்றும் எல்லோரிடமும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மொத்தம், 96 பேரிடம் வசூல் வேட்டை நடத்தி, முதற்கட்டமாக, 36 பேருக்கான பணி மாறுதல் பட்டியல் தயாரானநிலையில், அதில் பதிவுத்துறை தலைவர் கையெழுத்திட மறுத்ததால், அமைச்சருக் கும், துறைத் தலைவருக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், தமிழ கம் முழுவதும் ஐகோர்ட் தடையை மீறி, அங்கீகாரமற்ற மனை யிடங்கள் பதிவு செய்யப்பட்ட முறைகேடும் நடந்துள்ளது.

இதற்காக, ஏராளமான சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்டப்பதிவாளர்கள், பெரும் தொகையை லஞ்சமாக வாங்கிக் கொண்டு, முறைகேடுகளை

Advertisement

அரங்கேற்றியுள்ளனர். அந்த வகையில், ஒரு லட்சம் பதிவுகள், முறை கேடாக நடந்துள்ள தாக புகார்கள் வெளியாகின. அதைப் பற்றியும் பட்டியல் எடுத்த ஐ.ஜி., செல்வராஜ், சம்பந்தப் பட்டவர் களிடம் விசாரணையைத் துவக்கியுள்ளார்.

இதில், அமைச்சருக்கு பணம் கொடுத்து, அந்த பதவிக்கு வந்த பதிவுத்துறை அலுவலர்கள் பலரும் நேரடியாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த காரணங்களால் தான், ஐ.ஜி., செல்வராஜ் அதிரடியாக மாற்றப்பட்டு, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திலுள்ள சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக் கப்பட்டுள்ளது.

பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பட்டிய லில் கைெழுத்திடுவது, முறைகேடாக நடந்த, ஒரு லட்சம் பதிவுகள் தொடர்பான விசார ணையை முடிப்பது போன்ற காரியங்களுக் காகவே, இத்தனை பெரிய சீனியர் அதிகாரியை இந்த பொறுப்பில் கூடுதலாக நியமித்திருப்ப தாக சர்ச்சை எழுந்துள்ளது. பணி மாறுதலுக் காக நடந்த வசூல் வேட்டைக்கு ஒத்துவராத அதிகாரியை, இடம் மாற்றியிருப்பது, அரசின் மீதான 'வசூல்' புகார்களுக்கு, மற்றுமொரு பலமான ஆதாரமாக மாறியுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
22-ஏப்-201722:41:36 IST Report Abuse

adalarasanசெல்வராஜ் அவர்களை பாராட்டுகிறேன். இது போன்று எல்லா அரசாங்க அதிகாரிகள், போலீஸ் உட்பட , நேர்மையாக நடந்துகொண்டால், இது போன்ற, மத்யஸ்தர்கள், அரசியல்வாதிகளின் ஊழல் வொழியும் நேற்று மத்திய உள்துறை அமைச்சரும் இதைத்தான், பகிரங்கமாக சொல்லி உள்ளார்?

Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
22-ஏப்-201720:57:08 IST Report Abuse

m.viswanathanஇந்த மாதிரி ஊழல்கள் செய்வதற்காகத்தான் திராவிடன் ஆள வேண்டும் என்று 1967 இல் தமிழன் இவர்கள் பேச்சில் மயங்கி ஒட்டு போட்டான் . அடுக்கு மொழியில் அழகாக பேசியும் , பலகுரல் மன்னன் என்று Mimicry செய்தும் , சினிமா நடிகர்களை , நடிகைகளை கூட்டத்தில் காட்டியும் , இந்தி மொழி ஒரு அரக்கி , தங்கள் ஒரு தமிழ் காவலர் என தனக்கு தானே , கலைஞர் , நாவலர் , நாஞ்சிலார் , அண்ணா தம்பி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தும் , பார்ப்பனர் , திராவிடன் என பசப்பி வார்த்தை பேசியும் மக்களை ஏமாற்றும் மாய கலை தெரிந்ததால் தமிழன் , தலை நிமிரவே முடியாதபடி செய்து விட்டனர்

Rate this:
anvar - london,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201717:45:28 IST Report Abuse

anvarஇந்த சொம்பு சேகரன் எங்கேப்பா

Rate this:
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
22-ஏப்-201717:36:48 IST Report Abuse

samuelmuthiahrajஊழல் அதிகாரிகளும் ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகளும் விரைவில் கம்பி என்னும் நிலை ஏற்படப்போகிறது ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் நடந்தே தீரும் அதிகாரிகளே அலட்சியம் செய்வோர் பயங்கரமான படு குழிக்குள் விழுந்தே தீருவீர்கள் திருந்துங்கள்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-201714:59:32 IST Report Abuse

தமிழ்வேல் எல்லாத்தையும் இப்புடி வளர்த்து விட்டுட்டு அது போயி சேர்ந்துட்டுது.

Rate this:
22-ஏப்-201714:45:42 IST Report Abuse

PrasannaKrishnanOne question.I want to meet the parents of that particular minister.

Rate this:
22-ஏப்-201714:45:42 IST Report Abuse

PrasannaKrishnanOne question.I want to meet the parents of that particular minister.

Rate this:
22-ஏப்-201714:45:42 IST Report Abuse

PrasannaKrishnanOne question.I want to meet the parents of that particular minister.

Rate this:
22-ஏப்-201714:45:42 IST Report Abuse

PrasannaKrishnanOne question.I want to meet the parents of that particular minister.

Rate this:
22-ஏப்-201714:45:42 IST Report Abuse

PrasannaKrishnanOne question.I want to meet the parents of that particular minister.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement