விவசாயிகளுக்கு சமச்சீர் உர நிர்வாக பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு சமச்சீர் உர நிர்வாக பயிற்சி

Added : ஏப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பொள்ளாச்சி :பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் அலுவலகம் சார்பில், மண்பாதுகாப்பு, அதிக உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு, சமச்சீர் உர நிர்வாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்தியா முழுவதும் மண்வள அட்டை இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான மண் மாதிரிகள் சேகரிப்பு மற்றும் ஆய்வு முறைகளை கடைபிடித்து, மண் பரிசோதனையை அடிப்படையாக கொண்ட உரப்பரிந்துரை மண்வள அட்டைகள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவது இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.
கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 1.16 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்க திட்டமிட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, சமச்சீர் உர நிர்வாகம் குறித்த இரண்டு நாள் ஆற்றுபடுத்துதல் பயிற்சி பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் நடந்தது.
நேற்று இப்பயிற்சியில், 40 விவசாயிகள் பங்கேற்றனர். பயிற்சியின் முடிவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குனர் மோகன்ராஜ்சாமுவேல், அங்கக வேளாண்மையின் அவசியம், அங்கக சான்று பெறுதல் குறித்து விளக்கம் அளித்தார்.மண்வள அட்டை இயக்கம், மண் கட்ட வரைவு முன்மாதிரிகள் சேகரித்தல், மண் பரிசோதனை நிலையப்பணிகள் குறித்து, கோவை மண் பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண் அலுவலர் நிர்மலா விரிவாக விளக்கம் அளித்தார்.
மண்ணில் உள்ள பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட சத்துகுறைபாடு அறிகுறிகள், நிவர்த்தி முறைகள், மற்றும் களர் - உவர் நிலங்களில் உர மேலாண்மை குறித்து பொள்ளாச்சி வடக்கு வேளாண் உதவி இயக்குனர் வெங்கடாசலம் விளக்கம் அளித்தார்.ஒருங்கிணைந்த ஊட்டசத்து நிர்வாகம் மற்றும் சமச்சீர் உர நிர்வாகம் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவிபேராசிரியர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த உரவேளாண்மை மேற்கொள்வதனால், மண்ணின்வளத்தை பாதுகாப்பது அவசியமாகிறது.
மண்பரிசோதனை, அடிப்படையிலான உரப்பரிந்துரைகளை மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ளவாறு கடைபிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.பொள்ளாச்சி வடக்கு வேளாண் உதவி இயக்குனர் வெங்கடாசலம், வேளாண் அலுவலர்கள்,உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை