புறவழிச்சாலை குழியில் விழுந்து மாணவர் பலி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பொள்ளாச்சி :புறவழிச்சாலை பகுதியில் தோண்டப்பட்ட குழியில் கல்லுாரி மாணவர் விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் டேவிட் கிங் மகன் டேனியல் கிங், 22, இவர் எம்.ஏ., அஞ்சல் வழி கல்வியில் பயின்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நண்பர்களுடன் குழுவாக இணைந்து (குரூப் ஸ்டடி) படித்து விட்டு, கோவை மெயின் ரோட்டிலிருந்து குள்ளக்காபாளையத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக தரைமட்ட பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில், விழுந்து பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் இறந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்த டேனியல் கிங் நண்பர்கள் மற்றும் உறவினர்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.மனுவில், குள்ளக்காபாளையத்தை சேர்ந்த டேனியல் கிங் காலை, 3:30 மணிக்கு நண்பர்களுடன் இணைந்து படித்து விட்டு, கோவை மெயின் ரோட்டிலிருந்து குள்ளக்காபாளயைத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை வெட்டியிருந்த குழியில் விழுந்தார். குழி தோண்டப்பட்டு எவ்வித பாதுகாப்பு தடுப்புச்சுவர்கள் இல்லாததாலும், சரியான மின்சார வசதியில்லாத காரணத்தினாலும் டேனியல் குழியில் விழுந்து இறந்தார்.
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை தான் இந்த விபத்திற்கு காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முற்றுகையிட்ட நபர்களிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதனையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.