'நீரா' உற்பத்தியை கண்காணிக்க குழு: அரசுக்கு விவசாயிகள் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நீரா' உற்பத்தியை கண்காணிக்க குழு: அரசுக்கு விவசாயிகள் ஆலோசனை

Added : ஏப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உடுமலை :தென்னை மரத்திலிருந்து 'நீரா' பானம் அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நோக்கம் திசை மாறி செல்வதை தவிர்க்க கண்காணிப்பு குழு அமைப்பது அவசியம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.தென்னை சாகுபடி சார்ந்த மதிப்பு கூட்டு தொழில்கள் துவங்க பல்வேறு வழிகாட்டுதல் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால்வழங்கப்பட்டது. இருப்பினும், முக்கிய தயாரிப்பான 'நீரா' உற்பத்திக்கு அரசு அனுமதி வழங்காதது பின்னடைவை ஏற்படுத்தியது.
தற்போது, நீரா உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு கிடைத்த அனுமதி என்பதால், நோக்கம் திசை மாறாமல் செல்ல, கண்காணிப்பு குழு அமைப்பது அவசியம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஜெயமணி (மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர்): அரசு 'நீரா' பானம் இறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் பல லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயனடைவர். தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், விவசாய சங்கங்கள் மூலமே இறக்க அனுமதி வழங்கியுள்ளதால், அதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
'நீரா' பானத்தில் இருந்து தென்னஞ்சர்க்கரை, தேன், தென்னை பாகு, சாக்லெட், பிஸ்கட், இனிப்புகள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களும் உற்பத்தி செய்யமுடியும். இந்த சர்க்கரையை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துகொள்ளலாம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்பு அதிகமுள்ளது. இந்த 'நீரா'வை பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து, அதிகபட்சம் மூன்று மாதம் வரை பயன்படுத்த முடியும். சந்தை வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது.
பெரியசாமி (இந்திய விவசாயிகள் சங்க தாலுகா தலைவர்): விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை அளித்திருந்தாலும் 'நீரா' இறக்குவதை நெறிமுறைப்படுத்த வேண்டும். தற்போது கூட்டுறவு சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நீரா உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அனைவரிடமும் அனுமதி கொடுக்கும் போது தவறான செயல்களுக்கும் வழிவகுக்கும். தென்னை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி அதனை நெறிமுறைப்படுத்தினால் அரசு அனுமதி அளித்தற்கான நோக்கம் திசை மாறாது.
மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர்): பல நாட்களாக போராடிய விவசாயிகளுக்கு தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், 'நீரா' இறக்குவதற்கு மரங்களுக்கு அதிகளவில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதேபோன்று தேங்காய்க்கு ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை