அனல் வெயில்: அரசு நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனல் வெயில்: அரசு நடவடிக்கை

Added : ஏப் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தமிழகத்தில், அனல் வெயிலில் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

l உயர் கல்வி நிறுவனங்களில், தேர்வு எழுதும் மாணவர்கள், வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, சிறப்பு பஸ் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்
l பொது மக்களுக்கு, மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தேவையான மருந்து பொருட்களை, தயார் நிலையில், வைத்து இருக்க வேண்டும்
l கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
l கட்டுமான பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் முன் எச்சரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
l நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம், பொது மக்கள் கூடும் இடங்களில், நிழல் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்
l ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர் களுக்கு, குடிநீர்
மற்றும் நிழல் பந்தல் வசதி ஏற்படுத்த வேண்டும்
l அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில், வெப்ப அலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்து, நடைமுறைப்
படுத்த வேண்டும்.
இவ்வாறு தலைமை செயலர் அறிவுறுத்தினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை