பள்ளியில் ஜம்போ திட்டம்: மாணவருக்கு பரிசு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் ஜம்போ திட்டம்: மாணவருக்கு பரிசு வழங்கல்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே, பள்ளி மாணவர்களுக்கு, ஜம்போ உண்டியல் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூர் அடுத்த, லிங்கத்தூர் துவக்கப்பள்ளி மற்றும் காந்திகிராமம் கரூர் வைஸ்யா வங்கி கிளை சார்பில், அனைவருக்கும் ஜம்போ வங்கி சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டது. கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இந்திரா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு மற்றும் வங்கி பாஸ் புத்தகங்கள், ஜம்போ உண்டியல் வழங்கப்பட்டன. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செல்வராஜ், சேமிப்பு குறித்து பேசினார். காந்திகிராமம் கரூர் வைஸ்யா வங்கியின் மேலாளர் பிரகாஷ், சேமிப்பின் அவசியங்கள் குறித்து மாணவர்களிடம் பேசி இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் வினோதினி, கிராம கல்விக்குழுத்தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை