கழிவுநீர், மழைநீர் செல்ல வடிகால் வசதி தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர், மழைநீர் செல்ல வடிகால் வசதி தேவை

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செம்மடை: 'கரூர் - நாமக்கல் வழியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிமுடியும் நிலையில் மழைநீர் வடிகாலையும் கட்டி முடிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, செம்மடையைச் சேர்ந்த விவசாயி ரெங்கசாமி கூறியதாவது: கரூர் - சேலம் பழைய பைபாஸ் சாலை செம்மடையில் முடிந்து, புதிய பைபாஸ் சாலையில் இணைகிறது. காதப்பாறையில் இருந்து, மண்மங்கலம் பஞ்சாயத்தை இணைக்கும் பகுதியாக செம்மடை விளங்குகிறது. இந்த சாலையின் இருபுறமும் வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. ஆனால், செம்மடை பகுதியில் சாக்கடை வசதி இல்லை. ஒரு பெட்ரோல் பங்க்குக்கு வாகனங்கள் செல்ல வசதியாக சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. ஆனால், மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடைக்கு குழி தோண்டப்பட்டும் அதை சரிசெய்யவில்லை. நாளடைவில் இது தரையோடு தரையாகி விடும். கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்படும். ஆகையால், செம்மடை செல்லும் வழியில் மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியை கான்கிரீட் பாதை போட்டு தங்கு தடையின்றி கழிவுநீர், மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை