சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 32 மரங்கள், 12 மின் கம்பம் சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 32 மரங்கள், 12 மின் கம்பம் சேதம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால், அதிக அளவிலான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில் சூறாவளி காற்றுடன் துவங்கிய மழை, பலத்த மழையாக மாறி, இரண்டு மணி நேரம் நீடித்தது. இதனால், நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலை பனிப்பொழிவுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த சீதோஷ்ண நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், மழையால் காவேரி நகரில், 32 மரங்களும், 14 மின் கம்பங்களும் சாய்ந்தன. தனசேகரன் என்பவரது விசைத்தறி பட்டறை மீது பெரிய மரம் விழுந்ததில், சிமென்ட் அட்டைகள் உடைந்தன. தனசேகரன் படுகாயமடைந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கூரையிலும் மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. தாசில்தார் ரகுநாதன் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், சேதமதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை