மேற்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து: ஜி.ஹெச்., டாக்டர்கள் கைகள் கட்டி தர்ணா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேற்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து: ஜி.ஹெச்., டாக்டர்கள் கைகள் கட்டி தர்ணா

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இரண்டாவது நாளாக, கைகளை கட்டிக் கொண்டு, டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட டாக்டர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை, 7:00 மணிக்கு, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், வழக்கம் போல் பணிக்கு வந்த டாக்டர்கள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. அவசர சிகிச்சையை மட்டும் மேற்கொண்டனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், டாக்டர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'எங்கள் கோரிக்கையை, அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்' என, மருத்துவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை