பள்ளி அருகே மதுக்கடை: தடை விதிக்க கோரி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி அருகே மதுக்கடை: தடை விதிக்க கோரி மனு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ப.வேலூர் தாலுகா, வடைகரையாத்தூர் மக்கள், கலெக்டர் ஆசியா மரியத்திடம் அளித்த மனு விபரம்: வடகரையாத்தூர் இந்திரா நகரில் இருந்து ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில், தனியார் நிலத்தில் மதுக்கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவர். மேலும், குறிப்பிட்ட தூரத்தில் வீடுகள், விவசாய நிலங்கள் இருப்பதால் அப்பகுதி வழியாகச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும். எனவே, அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை