கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஜேடர்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ப.வேலூர் அடுத்த, ஜேடர்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ப.வேலூர் எம்.எல்.ஏ., மூர்த்தி தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். உச்ச வரம்பின்றி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேலையின்றி உள்ள விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நதி நீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும். மாநில அரசு அறிவித்த கரும்பு விலை நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.


* நாமக்கல், போக்குவரத்து கழக பணிமனை முன், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளன தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை