அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேதமான சாக்கடை சரி செய்யணும்! சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து, ஒடுவன் குறிச்சி அடுத்த, நான்காவது வார்டில் தேவேந்திர தெரு உள்ளது. இங்கு வேலம்பாளையம் சாலையோரம் போடப்பட்ட சாக்கடை கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் வெளியே செல்லாமல் சாக்கடை கான்கிரீட் வழியாக சென்றுவிடுகிறது. சாக்கடையை ஒட்டியுள்ள வீட்டு சுவர்கள், விரிசல் விட்டு பழுதடைந்து வருகின்றன. சாக்கடை கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இளநகர் அடுத்த, கட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, சாலையின் ஓரத்தில், மின்கம்பத்தில் நீண்ட தூரத்துக்கு செடி, கொடிகள் படர்ந்துள்ளன. அவை தொடர்ந்து படர்ந்து சென்றால், உயர்மின் அழுத்த கம்பியில் மோதி, விபத்தினை ஏற்படுத்தும். குடியிருப்புகளிலும் தீ பரவி, அசம்பாவிதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அருகிலேயே கால்நடைகளும் மேய்ந்து வருகின்றன. செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தம்: குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை பைபாஸ் சாலையில் உள்ள பச்சாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அதிக அளவிலான லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள தாபா ஓட்டல்களை அகற்ற வேண்டும். வாகனங்களை சர்வீஸ் சாலையில் நிறுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும். பஸ் ஸ்டாப்பில் நிறுத்தும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை தேவை.

செயல்பாட்டில் இல்லாத அடிபம்பு: ராசிபுரத்தில் இருந்து, ஆர்.புதுப்பட்டி செல்லும் ஒரு வழிப்பாதை சாலையில், வி.நகர் அருகே அடிபம்பு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது செயல்பாட்டில் இல்லை. சாலையின் அருகே இருப்பதால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் கவனக்குறைவாக வரும் போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்சிப் பொருளாக உள்ள பெயர் பலகை: பள்ளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையம் பஞ்சாயத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது சேதம் அடைந்து, எலும்புக் கூடு போல் காட்சியளிக்கின்றன. இதனால், மக்களுக்கு அது குறித்து தெரியாமலே போகிறது. எனவே, சேதம் அடைந்த அறிவிப்பு பலகைகளை சீரமைக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை