கூட்டுறவு சங்க தலைவருக்கு நெருக்கடி: ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாமகிரிப்பேட்டை: தவணை தவறிய கடன் வைத்துள்ள கூட்டுறவு சங்கத்தின், அ.தி.மு.க., தலைவர் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாரைகிணறு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செல்வராஜ் உள்ளார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஓராண்டாக மகாசபை கூட்டத்தை நடத்தவில்லை. இவர் பெயரில் வாங்கிய கடன், வாய்தா தேதி முடிந்து, ஆறு மாதங்களாகியும் திருப்பி செலுத்தவில்லை. இதுகுறித்து, கூட்டுறவு சங்க இயக்குனர்களே மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தனர். இதுகுறித்து, கடந்த, 20ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து எஸ்.ஓ., நெடுஞ்செழியன், நாரைகிணறு கூட்டுறவு சங்கத்திற்கு நேரடியாக வந்து ஆவணங்களை சரிபார்த்தார். இதில், தலைவர் மீதான குற்றங்கள் நிரூபணமானதால், ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஆவணங்களை நாமக்கல் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட பதிவாளர் முருகேசன் கூறியதாவது: நாரைகிணறு கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். துணை விதிகள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். எவ்வித சந்தேகமும் இன்றி தவறுகள் நிரூபணம் ஆனால், தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்