மண்மாதிரி சேகரிக்கும் பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்மாதிரி சேகரிக்கும் பணி துவக்கம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கலியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய நீடித்த வேளாண் இயக்கத்தில் மண்வள அட்டை இயக்க திட்டத்தில், 2017 - 18ம் ஆண்டுக்கான மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி, கடந்த, 10 முதல் நடக்கிறது. புவியியல் விபரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான இறவை பரப்பில், 2.5 ?ஹக்டேருக்கு ஒரு மாதிரி, மானாவாரி பரப்பில், 10 ?ஹக்டேருக்கு ஒரு மாதிரி என்ற முறையில் மண்மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அவை ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பயிறுக்கு ஏற்ற உரப்பரிந்துரைகளுடன் கூடிய மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மண்ணில் உள்ள சத்துகளை கணக்கிடுதல், உரச்செலவை குறைத்தல், மண்வளத்தை மேம்படுத்துதல், பயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய களர் மற்றும் அமிலத்தன்மையை அகற்றுதல், மண்ணில் உள்ள சுண்ணாம்பு நிலையை அறிந்து அதற்கேற்ப உரமிடுதல் ஆகிவை திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை