தந்தையை வெட்டிய மகன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை வெட்டிய மகன் கைது

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, சொத்து தகராறு காரணமாக தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர். ப.வேலூர் அடுத்த, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 67. இவரது மகன் ஜெகநாதன், 42. இவர்களுக்குள் ஏற்கனவே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை, 9:00 மணியளவில் ஜெகநாதன் தன் தந்தையிடம் சொத்தினை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சற்றும் எதிர்பாராத நேரத்தில், ஜெகநாதன் தண்டபாணியை அரிவாளால் தாக்கியதில், வலது புருவம் மற்றும் மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ப.வேலூர் போலீசார் ஜெகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை