ஓய்வூதியம் அறிவிக்கத் தவறினால் வேலை நிறுத்த போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியம் அறிவிக்கத் தவறினால் வேலை நிறுத்த போராட்டம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'வங்கிப் பணியாளர்கள் ஓய்வூதியம் அறிவிக்கக் கோரி, வரும், 24ல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டமும், மே, 22ல் காலவரையற்ற போராட்டமும் நடத்தப்படும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க, கிழக்கு மண்டல நிர்வாகக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தலைவர் மாதவன் தலைமை வகித்தார். தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஓய்வூதியம், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக் கோரி, வரும், 24ல் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து, கோரிக்கை மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், மே, 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து பணியாளர்கள் கலந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை