கார் மோதி டூவீலரில் சென்ற முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி டூவீலரில் சென்ற முதியவர் பலி

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: கபிலர்மலை அருகே, டூவீலர் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். ப.வேலூர் அடுத்த, வெங்கரை அருகே, கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பன், 70. நேற்று, டி.வி.எஸ்.,மொபட்டில் கபிலர்மலை சென்ற அவர், மதியம், 3:00 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கபிலர்மலை சாலை வளைவில், பாண்டமங்கலத்திலிருந்து கபிலர்மலை சென்ற கார், மொபட் மீது மோதியது. செல்லப்பன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நெட்டையம்பாளையத்தை சேர்ந்த சதீஷ், 27, என்ற கார் டிரைவரை கைது செய்து, விசாரித்து நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை