தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நகர, வட்டார பொதுக்குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நகர, வட்டார பொதுக்குழு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, நகர, வட்டாரக் கிளைகள் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் பொன்வீர சிவாஜி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஏழாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். நிதி உதவி பெறும் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கும் சிறப்புப்படியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரே ஆணையிட்டு வழங்க அனுமதி ஆணை வழங்க வேண்டும். மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவதுபோல், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை