முறைகேடு குறித்து விசாரணை: விவசாயிகள் சங்கம் வரவேற்பு| Dinamalar

முறைகேடு குறித்து விசாரணை: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மோகனூர்: மோகனூர் சர்க்கரை ஆலையில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டதற்கு, கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சர்க்கரை ஆலையில், எரிசாராய வடிப்பாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (ஆர்.ஓ., பிளான்ட்), ஆலையின் சொந்த நிதியை கொண்டு, 8.50 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. ஆனால், 2.50 கோடி ரூபாய் கூடுதலாக டெண்டர் விடப்பட்டு, பணம் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. சர்க்கரை ஆலை கூட்டுறவு இணைய மேலாண் இயக்குனர் பாஸ்கர், தலைமை சர்க்கரை பொறியாளர் சுப்ர மணியம் ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த, 18, 19 ஆகிய தேதிகளில், சர்க்கரை ஆலையில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் நவலடி கூறியதாவது: எங்கள் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை ஆலையில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டதை வரவேற்கிறோம். புகார் தொடர்பாக, ஆலையின் மேலாண் இயக்குனர் பிரியா மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், 2,000 ஆலை கரும்பு விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று, தமிழக முதல்வர், சர்க்கரைதுறை கமிஷனர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், இன்று (ஏப்., 22), காலை, 11:00 மணிக்கு, சர்க்கரை ஆலையில் நிர்வாகக்குழு கூட்டம், அதன் தலைவர் சிவபாக்கியம் தலைமையில் நடக்கிறது. அதில், முறைகேடு குறித்து பிரச்னை எழுப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.