தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை | தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை: நெல்லை கலெக்டர் அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை: நெல்லை கலெக்டர் அதிரடி

Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தாமிரபரணி, தண்ணீர், தடை, பெப்ஸி, கோக், pepsi, coke

திருநெல்வேலி: மே 1ம் தேதி முதல் தாமிரபரணி ஆற்றில் இருந்து கோக், பெப்சி உள்ளிட்ட 8 தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்து, நெல்லை கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.


உத்தரவு:

தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்ககூடாது என மதுரை ஐகோர்ட் கடந்த 2016 நவம்பர் 21ல் உத்தரவிட்டது. அதன் பிறகு, 2017 மார்ச் முதல் வாரத்தில் ஐகோர்ட் மீண்டும் அந்த தடையை நீக்கி தண்ணீர் வழங்கலாம் என தெரிவித்தது.

தொழிற்சாலைக்கு நீர் இல்லை : ஆட்சியர்


மே 1 முதல் தடை:

இந்நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வரும் மே 1 முதல் பெப்சி, கோக், மதுரா கோட்ஸின் 2 ஆலைகள், 3 காகித ஆலைகள், சிமெண்ட் ஆலை உட்பட 8 ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் கருணாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
22-ஏப்-201720:39:14 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan தண்ணியே இல்ல. இப்ப தடை போட்டு என்ன செய்யறது. இருக்கும்போது உறிஞ்சவிட்டதுதான் பெரிய குத்தம். தண்ணி எடுக்க தடை செய்யப்பட்ட எடத்துல இப்ப மணலை எடுக்க போறானுங்க. இதுக்கு வேற யாராவது தடை போடுவார்களா. தண்ணி எடுக்கணும் இல்ல மணலை எடுக்கணும். இதுதான் தமிழக ஆறுகளின் இன்றைய நிலை.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
22-ஏப்-201719:08:24 IST Report Abuse
Shanu இவர் வீட்டில் ஐடி ரெய்டு விட வேண்டும்/
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஏப்-201717:49:49 IST Report Abuse
Nallavan Nallavan தொழில் துவங்க வா .... வா ..... -ன்னு கெஞ்சிக் கூப்புட்டது யாரு ????
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஏப்-201716:27:56 IST Report Abuse
S.Baliah Seer PWD நாங்கள் தாமிரபரணியின் உபரி நீரைதான் கோக்,பெப்சி நிறுவனங்களுக்கு வழங்குகிறோம் என்று உயர் உயர் நீதி மன்றத்தில் வைத்த வாதத்தின் அடிப்படையிலேயே அது முன்னதாக வழங்கிய இடைக்கால தடையை ரத்து செய்தது.ஆனால் திருநெல்வேலி கலெக்டர் அணைகளின் நீர் மட்டம் குறைந்து வருகிறது என்று கூறி தடை விதிக்கிறார்.யார் பெரியவர் என்று PWD -யும்,கலெக்டரும் தங்கள் ஆளுமையை காட்டுகிறார்களா என்ன?இவர்களால் நீதிமன்ற நேரம் பாதிக்கப் படுகிறது.இந்த கம்பெனிகளுக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப் படுகிறது.1000 லிட்டர் தண்ணீரின் விலை வெறும் 37 ரூபாய் 50 பைசாதான் இவ்வளவுக்கும் உச்ச நீதி மன்றம் வியாபார நோக்குக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-201714:48:16 IST Report Abuse
Kasimani Baskaran பணம் பண்ண ஒரு உத்தி...
Rate this:
Share this comment
Cancel
saravanan - tenlasi  ( Posted via: Dinamalar Windows App )
22-ஏப்-201714:10:22 IST Report Abuse
saravanan ஒரு வாரம் மட்டும் தான்
Rate this:
Share this comment
Cancel
Rathnam - Tirunelveli,இந்தியா
22-ஏப்-201713:03:26 IST Report Abuse
Rathnam தாமிரபரணியில் தண்ணீரே இல்லாதபோது உபரி நீரைத்தான் Pepsi, Coke கம்பெனிகளுக்கு கொடுக்கிறேன் என்று இந்த வள்ளல் தான் பணம் பெற்றுக்கொண்டு தண்ணீரை கொடுத்தவன். இவனும் மாபியா கும்பலை சேர்ந்தவன்தான்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஏப்-201712:35:48 IST Report Abuse
Cheran Perumal இதில் ஒரு மந்திரி தலையிட்டு காசு பார்த்துவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Ramani -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-201711:57:22 IST Report Abuse
Ramani Appreciable move by the Collector. However it will only be a temporary ban, as the Political compulsions will only win lastly!
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
22-ஏப்-201711:25:46 IST Report Abuse
Jaya Ram இத்தமிழ் நாட்டில் ஊழல்கள் பெருகுவதற்கு அதிகாரிகளும் ஒரு காரணம் பக்கத்துக்கு மாநிலங்களை பார்த்தாவது நம் மாநிலத்தின் நலன் கருதி நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா ஒரு சிறு உதாரணம் கேரளாவிலோ, கர்நாடகாவிலோ ஆற்றில் மண் எடுக்க முடியாது ஆனால் இங்கு எடுக்கும் மணலை வியாபாரிகள் எவ்வாறு அந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றன அதனை தடுக்க வக்கற்ற கலெக்டர்களுக்கு பதவி சம்பளம் வேறு, மேலும் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் வந்து கொட்டுகிறார்கள் இதை தடுக்க வக்கில்லாத கலெக்டர்கள் பதவி வகிப்பதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் உங்களின் சம்பளம் மக்களின் வரிப்பணம் அரசியல்வாதிகளின் அப்பன் வீட்டு பணமல்ல எனவே இதை படிக்கும் அணைத்து அதிகாரிகளும் மக்களுக்கும் செயல் படுங்கள் எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளாவது நல்ல இருக்கும்
Rate this:
Share this comment
D.Muthukumaran - tirunelveli,இந்தியா
22-ஏப்-201713:02:13 IST Report Abuse
D.MuthukumaranMr .ஜெயராம்...இத படிச்சும் இந்த பன்னாடை .... திருந்தி வேலை பாக்க மாட்டானுங்க .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை