தர்மபுரி மாவட்ட இளம்பெண்கள் 750 பேர் வெளி மாவட்ட நூற்பாலையில் பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்ட இளம்பெண்கள் 750 பேர் வெளி மாவட்ட நூற்பாலையில் பரிதாபம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள், 750க்கும் மேற்பட்டோர், வறுமை காரணமாக, வெளி மாவட்ட நூற்பாலைகளில் பணியாற்றி வருவதாக, சைல்டு லைன் அமைப்பு நிர்வாகி தெரிவித்தார்.


நூற்பாலை மற்றும் ஆயுத்த ஆடையகத்துக்கு, பணிக்கு செல்லும் இளம்பெண் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், 'டீப்ஸ்' தொண்டு நிறுவனம் சார்பில், தர்மபுரியில் நடந்தது. மாவட்ட சைல்டு லைன் நிர்வாகி சைன்தாமஸ் தலைமை வகித்தார்.

அப்போது, 'டீப்ஸ்' தொண்டு நிறுவன தலைவர் சங்கர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், வறுமை காரணமாக, வளர் இளம்பெண்கள், உயர்கல்வி படிப்பு படிக்காமல் கோவை, ஈரோடு, திருப்பூர், அவினாசி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இயங்கும் நூற்பாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, ஏஜன்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். வேலை செய்யும் இடத்தில் பணி பாதுகாப்பு இல்லை. பாலியல் தொந்தரவு, அடிப்படை வசதியின்மை, குறைவான சம்பளம் போன்றவற்றால் இளம் பெண்கள் சிலர் பாதிக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளாக வேலை செய்தும், அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைப்பதில்லை. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், 750க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வெளிமாவட்ட நூற்பாலை, ஆயத்த ஆடை நிறுவனங்களில், அடிப்படை வசதிகளின்றி பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், நூற்பாலைகளில் பணியாற்றும், பல பெண்கள் தங்களது அனுபவங்களை கவலையுடன் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை