போர்வெல்களுக்கு 'சீல்' வைத்த விவகாரம்: தண்ணீர் வாகன உரிமையாளர் ஸ்டிரைக் வாபஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோபி: ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்ததால், இரு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட, தண்ணீர் வாகன உரிமையாளர்கள், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, தொட்டிபாளையம் பிரிவு முதல் புதுக்கரைப்புதூர், பிரதான சாலையில் சிலர் அனுமதியின்றி, ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. கோபி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட இடத்தில், ஒன்பது ஆழ்துளை கிணறுகளுக்கு 'சீல்' வைத்தனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக, தண்ணீர் வாகன உரிமையாளர்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணறு பிரச்னையை கிளப்பிய தரப்பினர், தண்ணீர் வாகன உரிமையாளர்கள், ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. சுமூக முடிவு எட்டாத நிலையில் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், தண்ணீர் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை, தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்