வறட்சியின் வரப்பிரசாதம் 'ஊறுகாய் புல்': கால்நடை வளர்ப்போருக்கு யோசனை | Dinamalar

வறட்சியின் வரப்பிரசாதம் 'ஊறுகாய் புல்': கால்நடை வளர்ப்போருக்கு யோசனை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: ''வறட்சி நேரத்தில், கால்நடை தீவனமாக ஊறுகாய் புல் தயாரித்து வழங்கினால், ஊட்டச்சத்து உடையதாகவும், பசுந்தீவன பற்றாக்குறையை சமாளிக்கும்படி அமையும்,'' என, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் யசோதை கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அதிக சத்துடையதாகவும், அதிக பால் உற்பத்திக்கு உகந்ததாகவும் அமையும். தற்போது வறட்சியாக உள்ளதால், உலர் தீவனங்களையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக, கரும்பு தோகையை பதப்படுத்தி, ஊறுகாய் புல் தயாரித்து, கால்நடைகளுக்கு வழங்கலாம். கரும்பு தோகையை சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிய குழிகளில் இட வேண்டும். அதன் மீது, நீரில் கரைத்த யூரியா, சர்க்கரை, உப்பு கரைசல் தலா ஒரு சதவீதம் தெளித்து, அதன் மீது மீண்டும் கரும்பு தோகையை போட்டு, இக்கரைசலை தெளிக்க வேண்டும். குழிக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளிலும் தயாரிக்கலாம். 100 கிலோ, 25 கிலோ பைகள் விற்பனைக்கு உள்ளன. 100 கிலோ கரும்பு தோகை துண்டுக்கு, தலா ஒரு கிலோ உப்பு, ஒரு கிலோ யூரியா, ஒரு கிலோ சர்க்கரையை, தண்ணீரில் கரைத்து கரைசலாக தெளிக்க வேண்டும். காற்று புகாதவாறு கட்டி வைத்து அல்லது அடைத்து வைத்து, 45 நாட்களுக்குப்பின், அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கலாம். 100 கிலோ ஊறுகாய் புல்லை, 15 நாட்களுக்குள் தீவனமாக வழங்கலாம். இதன் மூலம், கால்நடைகளுக்கு கால்சியம் உட்பட பல சத்துகள் கிடைக்கும். ஜூன், ஜூலையில் பருவமழை வரும் வரை பசுந்தீன பிரச்னை உள்ளதால், அதற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.