நூல் விலை உயர்வு எதிரொலி: துணிகள் விலையும் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலை உயர்வு எதிரொலி: துணிகள் விலையும் அதிகரிப்பு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: நூல் விலை உயர்வால், கடந்த இரண்டு மாதங்களுக்குள், தினசரி பயன்பாட்டு துணிகள் விலை, ஐந்து முதல், 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.
இதுகுறித்து, ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: கடந்த, மூன்று மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்வதால், துணி உற்பத்தி விலையும், உயர்ந்து விட்டது. கடந்த இரண்டு மாதத்தில், லுங்கி - ஏழு முதல், எட்டு ரூபாய்; பனியன், ஜட்டி - ஐந்து ரூபாய்; டிரவுசர், பாக்கெட்டுடன் கூடிய டிரவுசர் - 10 ரூபாய்; துண்டு - இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்; பெரிய துண்டுகள் - ஐந்து ரூபாய்; வேட்டி மற்றும் நைட்டி, 10 ரூபாய் என உயர்ந்துள்ளன. ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்க உள்ளதால், மே முதல் வாரத்தில் சீருடை துணிகள் அதிகம் விற்கும். தற்போது, மாணவர் சீருடை டிரவுசர், பேண்ட், சட்டை, மாணவியருக்கான சுடிதார் மெட்டீரியல் போன்றவை மீட்டருக்கு, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தையல் கூலியும், 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால், ஒரு செட் சீருடை தைக்க, 50 ரூபாய் உயர்ந்துவிட்டது. அரசு பள்ளிகளில் இலவச சீருடை வழங்குவதால், பிற பள்ளிகள் சீருடை விற்பனை, மே முதல் வாரத்தில் சூடுபிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை