நான் தி.மு.க.,வில் சேரப் போகிறேனா? மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி அலறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான் தி.மு.க.,வில் சேரப் போகிறேனா? மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி அலறல்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''நான், தி.மு.க.,வில் சேரப் போவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் யூகம் தான்,'' என, முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: கரூர் அடுத்த, வாங்கல் குப்புச்சிபாளையத்தில், மருத்துவக் கல்லூரி அமைக்க, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட அரசாணையை நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை. கடந்த, 17ல் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, மருத்துவக் கல்லூரி அமைக்க மனு கொடுத்தேன். அப்போது, அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தடையாக இருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். இதை, இருவரும் மறுத்தால், அதற்கு உரிய பதில் தர தயாராக உள்ளேன். உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டர், எஸ்.பி., - டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி மறுத்தாலும் வரும், 24ல் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும். மேலும், நான் தி.மு.க.,வில் சேர போவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் யூகம் தான். அதில், உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை