தலைமை காவலரை கொல்ல முயற்சி: தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமை காவலரை கொல்ல முயற்சி: தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூரில், குற்றப்பிரிவு தலைமை காவலரை, டாடா சுமோ காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சின்னதுரை, 40. இவர் கடந்த, 19ல், மதியம், 12:35 மணிக்கு, மஞ்சுநாதா தியேட்டர் அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு டாடா சுமோ காருடன், நான்கு பேர் கொண்ட கும்பல் நின்றிருந்தது. அதில், பெங்களூருவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அசோக் என்பவரும் நின்று கொண்டிருந்ததால், சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சின்னதுரை விசாரணை நடத்தினார். அப்போது, திருட்டு நகைகளை அடகு வைக்க, அவர்கள் ஓசூர் வந்தது தெரிந்தது. உஷாரான கும்பல், திடீரென சின்னதுரை மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றது. அதிர்ஷ்டவசமாக, இடது காலில் சிராய்ப்பு காயங்களுடன் சின்னதுரை தப்பினார். அங்கிருந்த மக்கள், நான்கு பேரையும் பிடிக்க முயன்ற போது, அவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடினர். ஹட்கோ போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை