பள்ளி இறுதி நாளில் ஆசிரியர்கள் இடையே மோதல்: தலைமையாசிரியர் உட்பட 5 பேர் கூண்டோடு 'சஸ்பெண்ட்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி இறுதி நாளில் ஆசிரியர்கள் இடையே மோதல்: தலைமையாசிரியர் உட்பட 5 பேர் கூண்டோடு 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, பள்ளி இறுதி நாள் தேர்வின் போது, ஆசிரியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் கூண்டோடு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, லக்கம்பட்டி நடுநிலைப் பள்ளியில், 61 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, தலைமையாசிரியராக ஊத்தங்கரை அடுத்த காட்டேரி நிர்மலா, 42, ஆசிரியர்களாக திருவேங்கடம், 46, ரேவதி, 35, சண்முகப்பிரியா, 38, உதயசிவசங்கரி, 28, ஆகியோர் உள்ளனர். ஓராண்டுக்கு முன், நியமிக்கப்பட்ட உதயசிவசங்கரி என்பவருடன், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடையே சுமுகமான உறவுநிலை இல்லை. இந்நிலையில், நேற்று பள்ளியில் இறுதித்தேர்வு நடந்தது. உதயசிவசங்கரி, பள்ளிக்கு தாமதமாக வந்ததால், தலைமை ஆசிரியர் நிர்மலா, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வினாத்தாள்களை வழங்கி, தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். இதனால், ஆத்திரமடைந்த உதயசிவசங்கரி, 'நான் இல்லாமல், என் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்தலாம்' என, வாக்குவாதம் செய்தார். பின்னர், வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை சமாதானம் செய்ய வந்த ஆசிரியர்கள் திருவேங்கடம், ரேவதி, சண்முகப்பிரியா ஆகியோரையும் உதயசிவசங்கரி தாக்கினார். அதனால், உதயசிவசங்கரியை மற்ற ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கினர்.

இவர்களின் மல்லுக்கட்டு சண்டையை பார்த்த மாணவர்கள், அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கிராம மக்கள், பள்ளியில் குவிந்தனர். ஜாதி பெயரை சொல்லி தன்னை அடிப்பதாக, உதயசிவசங்கரி பொதுமக்களிடம் கூறினார். அதனால், நான்கு ஆசிரியர்களையும் அறையில் வைத்து அடைத்து விட்டு, உதயசிவசங்கரியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., அர்ஜூனன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாபு, இருதரப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, தலைமை ஆசிரியர் நிர்மலா, திருவேங்கடம், ரேவதி, சண்முகப்பிரியா, உதயசிவசங்கரி ஆகிய ஐந்து பேரையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார். நிர்மலா, உதயசிவசங்கரி ஆகியோர் கொடுத்த புகார்படி, இருதரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாபு கூறுகையில், ''பள்ளியில் பணியாற்றும் ஐந்து ஆசிரியர்களும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களிடம், துறை ரீதியான மேல் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை