ஜி.எஸ்.டி.,யில் மஞ்சள், புளி, பூண்டுக்கு வரி: சேலம் லீ-பஜார் வர்த்தகர்கள் சங்கம் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.,யில் மஞ்சள், புளி, பூண்டுக்கு வரி: சேலம் லீ-பஜார் வர்த்தகர்கள் சங்கம் எதிர்ப்பு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட, ஏழு அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விதிக்கப்பட்ட வரிக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து, சேலம், லீ - பஜார் வர்த்தகர் சங்கத் தலைவர் திருமுருகன் கூறியதாவது: விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சள், புளி, வெல்லம், வரமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகிய அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அமலில் உள்ளது. வரும் ஜூலை, 1ல், அமலாகும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில், மேற்கண்ட பொருட்களுக்கு தலா, நான்கு சதவீதம் வரிவிதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரிவிலக்கு உள்ள பொருட்கள் அத்தனையும், அப்படியே, ஜி.எஸ்.டி., மசோதாவில், நீடிக்க வேண்டும் என்பதே, வர்த்தகர்களின் கோரிக்கை. அதை, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், புதிதாக வரிவிதித்து, விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், எதிரான போக்கை கையாண்டுள்ளது. இந்த முடிவை, மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும்.


அத்தியாவசிய உணவுப்பொருள் உள்பட, 350 பொருட்களுக்கு, நான்கு சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, ஆபரண கற்கள், கேன்டீன் பொருட்களுக்கு ஒரு சதவீதம் வரி; 'ஏசி' - ஹாஸ்பெட்டால் ஷீட், பேக்கரி வகைகள், சிமென்ட், கேபிள், உலர் பழங்கள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், கிரானைட், காலணிகள், பர்னிச்சர்ஸ், லெதர் பொருட்கள், டூவீலர்கள், பெயின்ட், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்ட, 172 பொருட்களுக்கு தலா, 12.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மதுவகைகள் மற்றும் லாட்டரி சீட்டுகளுக்கு, 20 சதவீத வரி விதிப்பு; மனித உயிருக்கு, கேடு விளைவிக்கும் சிகரெட்டுக்கு வரிவிலக்கு அளித்திருப்பது, வினோதமாக உள்ளது. அரிசி, தானிய வகை பயிர்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது ஆறுதலான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை