பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு வீடியோ பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வமுள்ள ஆசிரியர் விபரம் சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு வீடியோ பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வமுள்ள ஆசிரியர் விபரம் சேகரிப்பு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்புகளுக்கு, வீடியோ பாடத்திட்டம் அமைக்கப்பட உள்ளன. இதில், ஆர்வம் உள்ள ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது.
தமிழக கல்வி முறை, படித்து புரிந்து கொள்ளும் வகையில், புத்தக பாட முறை அமலில் உள்ளது. இதை மேலும் எளிதாக்கும் வகையில், விஷூவல் பாடத்திட்டமாக உருவாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக முதல்கட்டமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை, வீடியோ பாடமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, மாநில ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட வாரியாக, பாடத்திட்டத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் கொண்ட ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, பயிற்சியளித்து அதன் பின், பாடத்திட்டத்தை வீடியோவாக பதிவு செய்யும் பணிமனையில், பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுகுறித்து, டயட் விரிவுரையாளர் ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து கொண்டு தேர்வெழுதுவதில் சிரமம் உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்கள் கூட, காட்சியும் ஒலியும் சேர்ந்த வீடியோ வடிவ பாடமாக கற்கும் போது, எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்கின்றனர். மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு கையேடு போல், இந்த வீடியோ பதிவுகள் உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத விடுமுறையில் பணிமனை முடிந்து, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை வடிவ வீடியோ பாடத்திட்டம் தயாராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை