போராட்ட களமாக மாறி வரும் தமிழகம்: பா.ம.க., எச்சரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: ''தமிழகம் போராட்ட களமாக மாறி வருகிறது,'' என, சேலத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில், 3,321 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடியதற்கு, பா.ம.க.,வே காரணம். கட்சி வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கால், மதுக்கடைகள் அகற்றப்பட்டன. மூடிய கடைகளை, மாற்று இடங்களில் திறக்க, தமிழக அரசு முனைப்பு காட்டுவது அவமானம். மாற்று இடங்களில் கடைகளை திறக்க, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவர்களின் நலனுக்கு எதிராக அரசு செயல்படுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி, மதுக்கடைகளை திறக்க முயற்சித்தால், புரட்சி வெடிக்கும். வற்றாத ஜீவநிதி காவிரியும் காய்ந்துவிட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயமும் இன்றி, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. டில்லியில், தொடர்ந்து போராடும் விவசாயிகளை மத்திய அரசு, கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு போராட்டம், குடிநீர் கேட்டு போராட்டம் என, தமிழகம் போராட்ட களமாக மாறிவிட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அனைத்து கட்சி தலைவர்கள் டில்லிக்கு சென்று, பாதிப்பு, நெருக்கடி நிலையை எடுத்துக்கூறி, தமிழக பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்