தனியார் பள்ளி பஸ்சில் தீ: சேலத்தில் திடீர் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி பஸ்சில் தீ: சேலத்தில் திடீர் பரபரப்பு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த பஸ், திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம், உடையாப்பட்டி பைபாஸ் சாலையில், தனியார் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பள்ளி வளாகத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டிந்தன. அதில் ஒரு பஸ்சில், நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள், பஸ்சின் முன்பகுதி முற்றிலும் எரிந்து விட்டது. பஸ் இன்ஜினில் இருந்து, ஆயில் வெளியேறியதால், தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை