மீட்கப்பட்ட நவக்கிரக சிலைகள் அருங்காட்சியகத்தில் வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீட்கப்பட்ட நவக்கிரக சிலைகள் அருங்காட்சியகத்தில் வைப்பு

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வந்தவாசியில் மீட்கப்பட்ட நவக்கிரக சிலைகள், வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் ஒப்பைடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கெங்காபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன், கடந்த, 2010ல் சித்தேரியில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள முட்புதரில், சிலைகள் இருப்பதை வருவாய்த்துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள், அங்கிருந்த, ஒன்பது சிலைகளை மீட்டு, வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த சிலைகள் குறித்து, உரிமை கோருவதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கடந்த, ஆறு ஆண்டுகளாக சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், வந்தவாசி தாசில்தார் முருகன், வேலூர் அரசு அருங்காட்சியகத்தில், சிலைகளை ஒப்படைத்தார். இதுகுறித்து, அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் கூறுகையில், ''ஏழு சிலைகள், ஒவ்வொன்றும் ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள நவக்கிரக கற்சிலைகள்; ஒரு கற்சிலை, இரண்டு அடி உயரமுள்ள அம்மன் சிலையாகும். இவை, 50 ஆண்டுகள் பழமையானது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை