இடி தாக்கி விபத்து: தந்தை, மகன் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடி தாக்கி விபத்து: தந்தை, மகன் காயம்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வாணியம்பாடி அருகே, இடி தாக்கியதில், தந்தை, மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, மாதகடப்பா மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயி உமாபதி, 45. இவரது மகன் விஜய், 17. இருவரும், நேற்று முன்தினம், மாதகடப்பாவில் உள்ள தங்களது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். இரவு, 6:30 மணியளவில், இடியுடன் மழை பெய்தது. இதனால், அங்கிருந்த மாட்டுக் கொட்டகையில் ஒதுங்கினர். அப்போது, கொட்டகையின் மீது இடி விழுந்ததில், இருவரும் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை