சகோதரி மகனை கொன்ற நிறுவன ஊழியருக்கு ஆயுள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சகோதரி மகனை கொன்ற நிறுவன ஊழியருக்கு ஆயுள்

Added : ஏப் 22, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: பெண் கேட்டு தர மறுத்ததால், சகோதரியின் மகனை கொன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு, வேலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன், 36. இவர், தேவலாபுரத்தில் உள்ள தன் சகோதரி உமையாளின் மகன் செல்வகுமாரிடம், 27, 'உன் தங்கையை, எனக்கு திருமணம் செய்து கொடு' என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், 2014, ஆகஸ்ட், 15ல், மது குடிப்பதற்காக செல்வகுமாரை, கார்த்திகேயன் வளத்தூருக்கு அழைத்துச் சென்றார். அப்போது, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில், செல்வகுமாரை கார்த்திகேயன் தள்ளி கொலை செய்தார். இதுதொடர்பாக, மேல்பட்டி போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். இவ்வழக்கு, வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், குற்றம்சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை