நீரின்றி அமையப்போகிறதா உலகு.?| Dinamalar

நீரின்றி அமையப்போகிறதா உலகு.?

Updated : ஏப் 22, 2017 | Added : ஏப் 22, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

நீரின்றி அமையப்போகிறதா உலகு.?


சமீபத்தில் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றிவந்த அந்த 32 வயது இளைஞர் சுப்பிரமணியன் முகத்தில் களைப்பை விட அதிகம் கவலையே தென்பட்டது.
பிரிந்த கட்சிகள் சேருமா?நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி தேறுமா?என்பதற்காக ஏற்ப்பட்ட கவலையல்ல அது, தமிழத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை பற்றி யாரும் கவலைப்பட மாட்டேன் என்கிறார்களே என்பதால் ஏற்பட்ட கவலையே அது.


அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான சுப்பிரமணியன் படித்து முடித்து சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தாலும் மனம் முழுவதும் விவசாயிகளின் நலனைச் சுற்றி சுற்றியே வந்தது.
ஊறுக்கே சோறு போடும் விவசாயிக்கு நாட்டில் உரிய மரியாதை இல்லாத வருத்தம் காரணமாக விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்போம் என்ற கோரிக்கையை மக்களிடம் பரப்பவேண்டும் என்று முடிவெடுத்தார்.


இதற்க்காக நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் பலர் உடன் வருவதாக சொன்னார்கள், புறப்படுவதற்கு முதல் நாள் வேறு வேலை இருப்பதாக நண்பர்கள் ஒதுங்கிக்கொள்ள, தனி ஒருவனாக கடந்த மார்ச் 16ந்தேதி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
முதல் நாள் வாங்கிய புது சைக்கிள் இரண்டு செட் காட்டன் பேண்ட் டிசர்ட் தலைக்கு தொப்பி கையில் பிடித்து பேசக்கூடிய ஸ்பீக்கர் செலவுக்கு கொஞ்சம் பணம் இவற்றுடன் கிளம்பியவர் திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலுார்,கிருஷ்ணகிரி,தர்மபுரி உள்ளீட்ட 32 மாவட்டங்களையும் 32 நாட்களில் சுற்றிவிட்டு கடந்த வாரம்தான் சென்னை திரும்பினார்.


காலை 5 மணிக்கு கிளம்பிவிடுவார் வழியில் கிடைக்கும் எளிய உணவு தண்ணீர் இவருக்கு போதுமானதாக இருந்தது இரவுக்குள் அடுத்த ஊருக்கு போய்விடுவார் வழியில் பத்து பேர் இருந்தால் கூட சைக்கிளை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்துவிடுவார் ,கூடவே துண்டு பிரசுரத்தையும் விநியோகித்தபடி சென்றார்.
துண்டு பிரசுரத்தில் விவசாயிகளின் நலன் காப்பது மட்டுமின்றி,லஞ்ச ஊழலை ஒழிப்போம்,தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம்,மரம் வளர்ப்போம்,நீர்நிலைகளை காப்போம்,மதுவை ஒழிப்போம் என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.


தமிழகத்தின் பெரிய சிறிய நகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்களைக் கூடவிடாமல் கிட்டத்தட்ட 3ஆயிரத்து200 கிலோமீட்டர் துாரம் சுற்றிவந்த சுப்பிரமணியன் தனது பயண அனுபவத்தை தொகுத்த போது பல விஷயங்கள் வேதனையை ஏற்படுத்தியது.
குடிநீருக்காக மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், ஒரு நாளின் பெரும்பகுதியை தண்ணீர் தேடலுக்கே செலவழிக்கின்றனர் திருவண்ணாமலை அருகே ஒரு பஞ்சாயத்தில் அதிகாலையில் கிடைக்கும் ஒரு குடம் தண்ணீருக்காக விடிய விடிய துாக்கம் தொலைந்து காத்திருந்தனர்.


ராமநாதபுரம் போன்ற பகுதியில் அடுத்து ஊரில் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்காக நீளமான தண்ணீர் வண்டிகளே தயார் செய்து வைத்துள்ளனர்.நான்கு குடம் தண்ணீருக்காக குழந்தைகள் உள்ளீட்ட மொத்த குடும்பமே அந்த தண்ணீர் வண்டியை தள்ளிச்செல்கிறது.
பல ஊர்களில் ஆண்கள் குளிப்பது என்பது குழாய்களில் இருந்து கசிந்து வெளிவரும் தண்ணீரில்தான் அந்த தண்ணீரை நீண்ட நேரம் காத்திருந்து பிடித்துக் கொண்டு போய் பெண்கள் பயன்படுத்தக் கொடுக்கின்றனர்.நீர் நிலைகள் புனிதமானது அதனை போற்றி வணங்கிடக்கூட வேண்டாம் ஆனால் சுத்தமாக சுகாதாரமாக பராமரித்திட வேண்டாமா? இது தங்களது வாழ்வாதாரம் என்பதும் அடுத்துவரும் தலைமுறைக்கு தந்து செல்லவேண்டும் என்பதும் மக்களுக்கு ஏன் தெரியமாட்டேன் என்கிறது.
கையால் தோண்டி ஊற்று நீர் எடுத்துக்கொடுத்த காலமும் களமும் எனது தஞ்சை மண்ணில் இருபது ஆண்டுகளுக்கு முன்கூட இருந்தது,ஆனால் இப்போது அங்கே நானுாறு அடி ஐநுாறு அடி போர் போட்டும் தண்ணீரைக் காணோம் என்று சொல்லும் போது அழாமல் இருக்கமுடியவில்லை.


மாற்றம் என்பது யாரோ எங்கிருந்தோ வந்து ஏற்படுத்துவார்கள் என்று எண்ணக்கூடாது நமக்குள் இருந்துதான் அந்த மாற்றம் வரவேண்டும் நீர் நிலைகளை பாதுகாப்பதிலும் விவசாயத்தை முன்னெடுப்பதிலும் அந்த மாற்றத்தை துவங்கவேண்டும் இனி என் நிகழ்காலமும் எதிர்காலமும் இதைப்பற்றியேதான் இருக்கும் என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

சுப்பிரமணியனுடன் பேசுவதற்க்கான எண்:8939941185.
-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஜூன்-201711:14:54 IST Report Abuse
g.s,rajan மூன்றாம் உலகப் போர் ரெடி
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
05-ஜூன்-201707:57:58 IST Report Abuse
venkat Iyer வறட்சியில் கடை கோடி கிராமங்கள் சிக்கி தவிக்கின்றன. சுப்பிரமணியன் அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதால் பலன் எதுவும் இருக்காது என்றுதான் தோன்றுகின்றது என்பதை எனக்கு ஏற்பட்ட சம்பவத்தினை வைத்து சொல்கின்றேன்.அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில்,ஒவ்வொரு கிராமத்திலும்,குளமும்,ஒரு சிறிய பிள்ளையார் கோவிலும் நிசசயமாக இருக்கும். அந்த வகையில், ஒருவர் அல்லது பலரும் சேர்ந்து வேண்டுதலின் அடிப்படையில், ஊருக்காக தங்கள் பட்டாவில் குளத்தினை உருவாக்கி கொடுத்தனர். அவற்றினை நன்கும் பராமரித்தும் வைத்திருந்தனர். பலர் குடிநீருக்கு கூட பயன்படுத்தினர். 1963ஆம் ஆண்டில் அனைத்து சாதியினரும் பயன்படுத்தும் வகையில், குளத்தினை ரயத்துவாரியிலிருந்தும் , பட்டாவிலிருந்தும் எடுத்து புறம்போக்கு நீர் நிலையாக மாற்றியது. இங்குதான் பிரசனை உருவானது. அரசு ஒரு ஏக்கர் நீர்நிலைகளை மட்டும் பதிவில் வைத்துவிட்டு, அதற்கு குறைவான அளவு கொண்ட நீர் நிலைகளை எஸ் எப் -5 என்ற பதிவேட்டில் வைத்தது. ஆண்டுதோறும், நீர் நிலையை துயர் வாரிய போது கிடைத்த வண்டல் மண்ணில், கிராமத்தில் உள்ளவர்களே, காய்கறி பயிர் செய்தனர். இவை பெரிய குளங்கள் நான்கு புற படுக்கையின் கீழ் குறுகி போனதற்கு காரணமாக அமைந்துவிட்டது. சிறிய குளங்கள் சம்மந்தமாக உள்ள எஸ்.எப்.-5 பதிவு ஆவணங்கள் கிராமவிரவாக அலுவலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை. அதனை நில வரி வருமானத்துறையும் கண்டுக்கவில்லை. எங்களை போன்ற ஆட்கள், நீர் நிலையை காப்பாற்ற போராட போக, நாங்கள் ஆக்ரமணம் செய்தவர்களிடம் உதை வாங்குகின்றோம். அன்றைய காலத்தில் சிறு நீர் நிலைகள் ஒரு ஏக்கருக்கு குறைவாக உள்ளவரை கிராம நிர்வாக அலுவலகம் பதிவில் சரியாக வைக்கவில்லை.அரசு,அன்று அருகில் உள்ள வாசிகள் பார்த்து கொள்ள சொல்லியது. இன்று அவை ஆக்ரமணம் செய்யப்பட்டு, தனி நபர் பயன்பாட்டுக்கு, சென்று உள்ளது. வருவாய் ஆய்வ ஆல்டர் என்னிடம் உனது பட்டாவா என்றும், காவல்துறை உதவி ஆய்வாளர் உனது சொத்தா போகின்றது என்றும் கேட்பது, ஆக்ரமணம் செய்பவர்களை உற்சாகம் அடைய வைக்கின்றது. அரசு துறையில் பணிபுரிபவர்கள் அடிப்படை உண்மை தெரியாமல், தனக்கு கிடைக்கும் ,ஆதாயத்திற்காக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்று கண்ணுக்கு தெரிந்தே நீர் நிலையை இழந்து வருகின்றோம், நண்பர்களே இது நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம்,மடப்புரம் கிராமம், மண்மலை அக்ரஹாரத்தில் உள்ள குளம் ஆக்ரமணம் செய்து ,பயிர் செய்ய துவங்கி உள்ளன. உண்மையில்,கண்ணுக்கு தெரிந்து பல்வேரு சிறு குட்டைகள், ஊரணிகள் சீரழிந்து வருகின்றன. நாங்கள் நீர் நிலையை காப்பாற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட நீர் நிலை பாதுகாப்பு சங்கம் மாவட்ட ஆ டீசியாரை கெளரவ தலைவராக கொண்டு செயல்பட்டு வருகின்றோம். நீர் நிலையை காப்பாற்ற விரும்பும் ஆர்வலர்கள் 9444571248 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் -க்கு முகவரியை அனுப்பி வைக்கவும்.நாங்கள் தொடர்பு கொள்ளுகின்றோம் ,'
Rate this:
Share this comment
Cancel
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
31-மே-201712:58:27 IST Report Abuse
arumugam subbiah "தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு" என்ற MGR அவர்களின் கூற்றுக்கு வலுசேர்த்து பொது தொண்டு புரியும் அய்யா சுப்பிரமணியன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஊரார் தெரிந்து கொள்ள படம்பிடித்து ஏரியை தூர்வாருவதாக கூறி அன்றைய தினமே மாலை 6 மணிக்குமேல் அள்ளும் வண்டல் மண்ணுக்கு விவசாயிகளிடம் பணம் வசூலிக்க உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு கண்டனமும் தெரிவித்து கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
v.subramanian - madurai,இந்தியா
29-மே-201715:02:19 IST Report Abuse
v.subramanian நண்பரே என் பெயரும் சுப்ரமணியன் தான் நான் எண்பதை நெருங்கிக் கொண்டிருப்பவன். நீங்கள் இளைஞர். நான் பலமுறை எழுதி தினமரில் பிரசுரம் ஆனதை திரும்ப சொல்கிறேன். அதாவது மழைநீர் சேகரிப்பதுபோல் அக்கினத்திலேயே நாம் அன்றாடம் துணி துவைக்க, குளிக்க உபயோகிக்கும் நீரை சேகரித்தல் அந்த நீர் பூமியில் இறங்கி நிலத்தடி நீராக திரும்ப நமக்கு கிடைக்கும்.ஆனால் அந்த பகுதியில் உள்ள எல்லோரும் செய்யவேண்டும்.இதை நீங்கள் சரியானதுதான் என்று கருதும் பச்சத்தில் இதையும் தங்கள் பிரச்சாரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் தனிமனித முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மே-201712:28:50 IST Report Abuse
Nallavan Nallavan பாராட்டுக்குரியவர் .... நம்மாலான உதவிகளை செய்யலாம் ....
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
03-மே-201710:56:45 IST Report Abuse
Paranthaman மழை பொய்த்துள்ளதற்கு ஆறுகளை சுரண்டி வாரும் மணலும் காரணமாகும். எப்படியெனில் நிலத்தில் விழும் சூரிய வெப்பத்தை விட ஆற்று மணல் சூரிய வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும் சக்தி உடையது. அவெப்பத் தணல் வானில் பரவி கடலின் குளிர்வை நோக்கி நகர்வதால் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புண்டு. எனவே ஆற்று மணலை அள்ளுவது சமுக விரோத செயல். விவசாயிகளின் வாழ்வை பாதிக்கும் செயல்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
02-மே-201716:11:02 IST Report Abuse
ganapati sb பாராட்டுதலுக்குரிய தனியொருவனின் அக்கறை ஆதங்கம் சமுதாயத்தில் அரசியல்வாதிகளிடமும் வெளிப்பட்டால் தடுப்பணைகள் நீர்நிலைகள் தூர்வாருதல் ஆக்ரமிப்பு அகற்றம் கடல்நீரை குடிநீராக்குதல் போன்றவை உயிர்பெற்று மக்களும் நாடும் நீர்வளம் பெரும்.
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
02-மே-201711:07:30 IST Report Abuse
S.prakash இந்த பகுதியில் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன், மணல் அள்ளுவதை நிறுத்தினால் தான் இந்தியாவிற்கு போதுமான மழை பெய்யும் என்று.ஆனால் விவசாயிகள் சங்கம் வரை விளம்பரத்திற்க்காகத்தான் போராடுகிறார்கள் தவிர மணல் அள்ளுவதற்கு எதிராக அல்ல.ஒரு நீதிபதியும் விஞ்ஞான ரீதியாக தீர்வு காணும் முயற்சியில் இல்லை. நாடு குட்டிசெவுருதான்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
29-ஏப்-201719:48:29 IST Report Abuse
Paranthaman நண்பரே சாக்கடை கணக்கெடுப்பை சொல்லி இருக்கிறீர்கள். மனிதானால் உருவாகும் சாக்கடையை தூய்மை படுத்துவது மழையே. மழை பெய்தால் சாக்கடை கழிவுகள் அகன்று சாக்கடை சுத்தமாகும். மழை பெய்வதால் காற்றுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. அக்காற்றால் செடி கொடிகள் பயிர்கள் பசுமை பெறுகின்றன. மழை ஒட்டு மொத்த நாட்டை அவ்வப்போது கழுவி சுத்தம் செய்கிறது. சமீப காலமாக மழை மேகங்கள் சரியாக உருவாக வில்லை. அப்படி உருவானாலும் பருவ மழையாக இல்லாமல் புயல் மழையாக ஒரு பெயருடன் வருகிறது. தீர்க்க ரேகை அட்ச ரேகை எனப்படும் கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு தெற்கான பூமத்திய ரேகைகளில் வடக்கு தெற்கு ரேகை வெப்ப ரேகையாகவும் கிழக்கு மேற்கு ரேகை குளிர் ரேகையிகவும் இருக்கலாம். இந்தியாவின் புவி இயல் அமைப்பில் பூமத்திய ரேகைகளில் வடக்கு தெற்கு வெப்ப ரேகையில் குறுக்கிடும் சிவனது ஆலயங்களாலும் வெப்பம் மிகுந்து மழை குறைந்துள்ளது. மேலும் பல கோடி மனிதர்கள் வனவிலங்குகள் வெளி விடும் மூச்சுக்காற்றாலும் தீட்சணிய மிக்க கொடூர மனிதர்களின் கொடுஞ்செயல்களாலும் பூமி வெப்பமாகி உள்ளதாக கருதவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Shiva Kumar - Chennai,இந்தியா
28-ஏப்-201717:07:51 IST Report Abuse
Shiva Kumar முதலில் சாக்கடையை எந்த ஒரு ஆற்றிலும் கலக்கமா இருங்க. கோயம்பேட்ட்டுல இப்போ இருக்கற பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம் எல்லாம் சேர்ந்து ஓருபெரிய ஏரி. இப்போ அது இருந்த இடம் தெரில்ல. கூவம் ஆற்றில் ரொம்போ நல்ல தண்ணி ஓடும். இப்போ சாக்கடை ஓடுது. அடையாறு மட்டும் என்ன, அதுவும் இப்போ மற்றோரு சாக்கடை. பக்கிம்காம் கானால் காணா போய்விட்டது. மயிலாடுதுறைல... காவேரி... இப்போ அது ஒரு சாக்கடை... .. ... விழுப்புரத்தில் இருந்த ஏரி காணும்... ... இதெல்லாம் எனக்கு தெரிந்தது... இன்னும் தெரியாதது நிறைய இருக்கு.... நீங்கள் பண்ணுவது எல்லாம் கண் கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம்.....
Rate this:
Share this comment
Pillai Rm - nagapattinam,இந்தியா
15-ஜூன்-201712:53:01 IST Report Abuse
Pillai Rmஇது நால்லாத்தான் கீது ...ஆனா திராவிடன் ஒத்துக்க மாட்டான் தமிழன் ட்ட வேணா கேட்டு பாக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை