புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா மகா சமாதியில் பஞ்சமித்ர கீர்த்தனை...| Dinamalar

புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா மகா சமாதியில் பஞ்சமித்ர கீர்த்தனை...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா மகா சமாதியில் பஞ்சமித்ர கீர்த்தனை...


அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று.(24/04/2017)
இதை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலும் ஹாலில் பிரதானமாக காணப்படும் சாய்பாபாவின் மகா சமாதியும் பல்வேறு விதமான மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

காலை 8 மணிக்கு சாய் பஞ்சமிர்த கீர்த்தனைகள் இயற்றப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா மற்றம் மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் 265 பேர் ஒன்றுகூடி இந்த கீர்த்தனைகளை இசைத்தனர்.

ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது.


அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார்.

சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.

* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.
* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.

"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மே-201716:56:24 IST Report Abuse
Endrum Indian பரிதாபம். நன்றாக யோசித்துப்பாருங்கள். இன்று காலையில் பகவத்கீதை பிரவசனத்தில் (காரில்) கேட்டது. "தந்தைக்கு ஒருவன் கொள்ளி வைக்கின்றான், அவனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் வருமா? ஏனென்றால் அவன் தந்தை அந்த பிணம். அதாவது உயிருள்ளவரை, ஆத்மா இருக்கும் வரை தான் அது தந்தை அது சென்று விட்டால் அந்த உடல் பஞ்சபூதங்களுக்கும் சென்று அது ஐக்கியமாகி விடும் அக்னி இடும் போது ஆகவே அவன் அக்னி இட்டது அந்த உடலுக்குத்தான் அவன் தந்தைக்கு அல்ல". அது போலவே சத்யா சாயி பாபா உடல் புதைத்த சமாதியும் அதே போலத்தான். அவர் சொன்ன மந்திரங்களை, நல் வார்த்தைகளை அனுசரியுங்கள், ஆத்மா இல்லாத உடலுக்கு தலை வணங்காதீர்கள். அதை தோண்டிப்பார்த்தால் அது எப்போதோ மண்ணோடு மண்ணாகியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201719:12:19 IST Report Abuse
VSK பஞ்சரத்ன கீர்த்தனை ஓம் சாயிராம் .
Rate this:
Share this comment
harish - Chennai,இந்தியா
26-ஏப்-201716:43:30 IST Report Abuse
harishதிருவையாறு பஞ்சரத்னா கீர்த்தனை காப்பி அடித்திருக்கிறார்கள். எல்லாமே காப்பி தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்