சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்:26 வீரர்கள் வீர மரணம்| Dinamalar

சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்:26 வீரர்கள் வீர மரணம்

Updated : ஏப் 25, 2017 | Added : ஏப் 24, 2017 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சட்டீஸ்கர்,  நக்சல், தாக்குதல், 26 வீரர்கள், பலி ,CRPF, personnel, killed, Naxals, Chhattisgarh, Sukma

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 26 பேர் வீர மரணம் அடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் சிந்த்தாகுபா பகுதியில் , இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ராமன்சிங் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


300 நக்சல்கள் தாக்குதல்

பாதுகாப்பு படையினர் மீது 300 நக்சல்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட் தாக்குதல்: 26 வீரர்கள் பலி


7 பாதுகாப்பு படையினர் மாயம்

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 7 பாதுகாப்பு படைவீரர்கள் மாயமாகி உள்ளதால் அவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி கண்டனம்


சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சி.ஆர்.பி.எப்.வீரர்கள் மீதான தாக்குதல் வேதனை அளிக்கிறது. நக்சல்களின் கோழைத்தனத்தை இத்தாக்குதல் காட்டுகிறது. நிலைமை உன்னிப்பகாக கவனிக்கப்பட்டு வருகிறது என்றார்.



3 தமிழக வீரர்கள் வீர மரணம்

சட்டீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 26 சி.ஆர்.பி.எப்.வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் வீர மரணமடைந்த சி.ஆர்.பி. எப். வீரர்களி்ல் 3 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் என கூறப்படுகிறது.

இ்த்தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்.தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
25-ஏப்-201711:31:41 IST Report Abuse
kc.ravindran அடிக்கடி அகில இந்தியா igp மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த நக்சல் மனித குல துரோகிகளை அடக்க கூண்டோடு அழிக்க இவர்களால் வழி வகை செய்ய முடியாதா? இல்லை, அப்படி வழிகள் காண்பித்த பிறகும் அரசுகள் செயல் படவில்லையா? பொது மக்களுக்கு இவைகளை பற்றி தெளிவாக்கப்படவேண்டும். துள்ளி ததும்பும் பெரிய நீர் தேக்கத்தின் மீது சிறிய காற்றில் கூட பறக்கும் தெர்மோகோல் அட்டைகளை ஸ்டிக்கரால் இணைத்து மூட பார்க்கும் அமைச்சர்களால் நாட்டிற்கு அவமானம் உண்டாகும். பணம் வீணடிக்கப்படும். கேட்பார் யாருமில்லை. இதுபோன்ற அமைச்சர்கள் சில சமயம் நக்சல் இயக்கத்தை அழிக்க நசுக்க ஓகே சிக்னல் கொடுப்பதும் இல்லை. இக்கொடூர கொலைகளை கண்டு ஆனந்தம் அடையும் மிருகங்களும் நம்மிடையே உண்டு. லால் சலாம் என்று ஊரை ஏமாற்றி கொலைகாரர்களை வளர்த்துவிடுவார்கள். இவர்கள் தம் குடும்பத்தில் உள்ளவர்கள் இதுபோன்ற அகால மரணம் அடையும்போது இவர்கள் உணவார்கள். மத்திய அரசு கோம்பிங் ஆப்பரேஷன் செய்து பயங்கர ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களை கண்டதும் சுட ஏதுவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நாட்டிற்காக மடிந்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்கும். போலீசுக்கு "உதவி" செய்யும் இன்போர்மண்ட் களுக்கு அதிகமான சலுகைகள் கொடுத்து கொடூரக்காரர்களின் நீக்கங்களை முன்கூட்டியே அறியவேண்டும். எல்லோரையும் சேர்த்து ஏன் பல வண்டிகளில் அனுப்பக்கூடாது என்று கேட்க தோன்றுகிறது. இது போன்று பல கேள்விகள் மனதில் எழுகின்றன. தெர்மக்கோல் பறக்ககிவிடும் அமைச்சர்கள் நிறையே உள்ளனர் நம்மை நிம்மதியாக வாழ விட நம்மை காப்பாற்ற என்று நிம்மதி கொள்வோம்.
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
25-ஏப்-201710:17:56 IST Report Abuse
Marshal Thampi ஆழ்ந்த இரங்கல்கள்.....
Rate this:
Share this comment
Cancel
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
25-ஏப்-201709:53:07 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். நம் வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X