நக்சல்களை ஒடுக்க ராஜ்நாத் தலைமையில் மே 8-ல் 10 மாநில முதல்வர்கள் கூட்டம்| Dinamalar

நக்சல்களை ஒடுக்க ராஜ்நாத் தலைமையில் மே 8-ல் 10 மாநில முதல்வர்கள் கூட்டம்

Updated : ஏப் 26, 2017 | Added : ஏப் 25, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நக்சல்களை ஒடுக்க ராஜ்நாத் தலைமையில் மே 8-ல் 10 மாநில முதல்வர்கள் கூட்டம்

புதுடில்லி: நக்சல்களின் அட்டகாசத்தை ஒடுக்க 10 மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்படும், பேஜி கிராமத்தை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில், 20 கி.மீ., துார சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இப்பகுதியை நேற்று , பயங்கர ஆயுதங்களுடன் வந்த நக்சலைட்டுகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத சமயத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நிலைகுலைந்தனர். நக்சலைட்டுகளின் சரமாரி தாக்குதலால், 26 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்;

மாவோயிஸ்ட்களை ஒடுக்க மே 8-ல் ஆலோசனை

நக்சல்களின் இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவி்த்துள்ளனர். இந்நிலையில் நக்சல்களின் கொட்டத்தை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நக்சல்கள் பாதிப்பிற்குள்ளான 10 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும்மே 8-ம் தேதி டில்லியில் உயர் மட்ட குழுக்கூட்டம் நடக்கிறது. இதில் ராஜ்நாத் கலந்து கொண்டு உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக சத்தீஸ்கர் சென்ற ராஜ்நாத்சிங், வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பிறகு மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் நக்சல் தாக்குதல் குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
26-ஏப்-201712:10:59 IST Report Abuse
ஜெயந்தன் எல்லையில் பாக் தீவிரவாதிகள் தாக்கினாலும் நம் ஜவான்கள் தான் இறக்கிறார்கள். உள்ளூர் தீவிரவாதிகள் தாக்கினாலும் இழப்பு நம் பக்கம் தான் .. ஏன் அப்படி ?? அரசு சரியில்லை என்றே அர்த்தம்.. வாய் சவடாலால் எதையும் சாதிக்க முடியாது என்பது எப்போது உறைக்குமோ ???
Rate this:
Share this comment
Cancel
Kalai Mahal - Madurai,இந்தியா
26-ஏப்-201711:25:17 IST Report Abuse
Kalai Mahal என்ன தான் பண்றாங்க goverment. இந்த சிபிஐ என்ன தான் பண்றாங்க இன்னு தெரியல
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201708:19:28 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்க ஆலோசனை செயது முடிவு எடுக்கிறதுக்குள்ளே மீண்டும் எதுவும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X